சென்னையில் தங்கம் விலை திங்களன்று மாலை வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அனைத்து இந்தியா சரஃபா சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 10 கிராம் தங்கத்தின் விலை 2430 ரூபாய் உயர்ந்து ரூ. 88,500 ஐத் தொட்டது. சர்வதேச சந்தை வர்த்தகம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,900 டாலர்களைத் தாண்டியது தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமெரிக்கா அரசு எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு புதிய வரிகளை விதித்ததை அடுத்து, உலகளாவிய பொருளாதாரம், ஏற்றுமதி சந்தையில் புதிய தடுமாற்றம் உருவாக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளான தங்கத்தை நோக்கி திரும்பினர்.

கடந்த வாரம் வர்த்தக முடிவில், 99.9% தூய்மை கொண்ட தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 86,070 ஆக இருந்தது. ஆனால் திங்களன்று ரூ. 2,430 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதேபோல, 99.5% தூய்மை கொண்ட தங்கத்தின் விலையும் ரூ.2,430 உயர்ந்து ரூ.88,100 ஐ எட்டியது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து, கிலோவுக்கு ரூ.97,500 ஐத் தொட்டது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பல முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் செய்திருந்த முதலீடுகளை வெளியேற்றி தற்போது பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர்ந்தியுள்ளனர்.
இன்று மாலை வர்த்தகத்தில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), ஏப்ரல் மாதம் முடியும் தங்கம் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் ரூ.940 உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ. 85,828 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷனின் அறிக்கையின்படி, புல்லியனில் தங்கத்தின் விலை ரூ. 85,665 ஐ எட்டியது. அதே நேரத்தில், MCX இல் மார்ச் மாதம் முடியும் வெள்ளி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் ரூ.632 உயர்ந்து, கிலோவுக்கு ரூ. 95,965 ஐ எட்டியது.
உலகளாவிய சந்தையிலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. காமெக்ஸ் தங்க ஃபியூச்சர்ஸ் ஒரு அவுன்ஸுக்கு 45.09 டாலர் அதாவது 1.56% உயர்ந்து, ஒரு அவுன்ஸுக்கு 2,932.69 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில், சர்வதேச சந்தைகளில் ஸ்பாட் தங்கம் 2,900 டாலர் என்ற நிலையை தாண்டியது.


Click it and Unblock the Notifications