இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை இந்த ஆண்டு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் தங்க நகை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் தங்கம் சார்ந்து இன்று காட்டாயம் அறிவிப்பு இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு, இப்படியிருக்கையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க அரசின் முடிவால் சூறாவளி கிளம்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரத்தில் அந்நாட்டின் வர்த்தகம் தொடங்கியதும் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,815.75 அளவை நெருங்கியது. புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார காரணிகள் இணைந்து இந்த விலை அதிகரிப்பைத் தூண்டியுள்ளன.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்நாட்டின் இறக்குமதியின் மீது 25% வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பில் எவ்விதமான மாற்றமும், தளர்வு இல்லை என அறிவித்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தின் சப்ளை செயினில் பாதிப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல், வர்த்தகப் போரின் துவக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரிக்கும் அச்சமும், பொருளாதார நிச்சயமற்ற நிலையும் அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியா - சீனா இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் மீது, சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை புதிய நாணயத்துடன் மாற்ற முயற்சித்தால், அவர்களின் ஏற்றுமதிகளின் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை மீண்டும் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் இந்த தீவிரமான முடிவு புவிசார் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்து, பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால், முதலீடு சந்தையில் ஏற்படும் தடுமாற்றத்தை தங்கம் மீது முதலீடு செய்து முதலீட்டாளர்கள் சமாளித்து வருகின்றனர்.
இதன் வாயிலாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications