உலகளாவில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து, சாமானிய நடுத்தர மக்கள் தங்க நகையை வாங்க முடியாமல் புலம்பி வரும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக தங்கம் விலை அடுத்த சில வாரங்களுக்கு தடாலடியாக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே தங்கம் தினமும் 500 முதல் 1000 ரூபாய் வரையில் உயர்ந்து செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 11 சதவீதம் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இந்த உயர்வு பாதை அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் வகையில் சூழ்நிலை உருவாகியுள்ளது இந்திய மிடில் கிளாஸ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்நாட்டு டிமாண்ட், வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறைவு தான். ஆனால் சர்வதேச சந்தை விலை, வர்த்தகம், டிமாண்ட், டாலர் மதிப்பு, பவுண்ட் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவில் உருவாகியுள்ள ஷட்டவுன் அச்சம் மற்றும் பெடரல் ரிசர்வ்-ன் அடுத்த வட்டி விகித குறைப்பு ஆகியவை தங்கம் விலையை இன்று வரலாற்று உச்சத்திற்கு உயர்த்தியுவள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை சர்வதேச வர்த்தக சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது, மேலும் 14 ஆண்டுகளில் சிறந்த மாதாந்திர வளர்ச்சியை பதிவு செய்யும் நிலையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
டிரம்ப் வரி கொள்கைகள்
டிரம்ப் அரசின் வரி விதிப்பு கொள்கைகள் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக மாற்றியுள்ளன. இதனால் அமெரிக்கா முதல் இந்தியா வரையில் சிறு, குறு, பெரிய முதலீட்டாளர்கள் வரையில் தங்கத்தை முக்கிய முதலீடாக மாற்றியுள்ளனர்.
ஷட்டவுன் அச்சம்
இதேபோல் அமெரிக்க அரசு செலவின கொள்கை மூலம் அந்நாட்டில் அரசு சேவைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. டிரம்ப்-ன் கடந்த ஆட்சியிலும் இத்தகைய ஷட்டவுன் நிலை உருவானது, இப்போது அரசு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர், அரசு சேவைகள் மூடப்பட்டு, செலவுகளை குறைக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்கள் 3 நாள் முதல் 1 வாரம் வரையில் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவானது. இதனால் அமெரிக்க சந்தையில் பதற்றம் அதிகரித்து முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்புகின்றனர்.
தங்கம் விலை வரலாற்று உச்சம்
இதன் எதிரொலியாக செப்டம்பர் 30, 2025 அன்று, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்க விலை 3,865.97 டாலராக உயர்ந்தது வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க சந்தையில் உருவாகியுள்ள பொருளாதார மந்தநிலை தான்.
அமெரிக்க ஃபெட் வட்டி குறைப்பு
இந்த பிரச்சனையை சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாத கூட்டத்தில் மொத்தமாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் சிஎம்இ குரூப்ஸ் ஃபெட்வாட்ச் தரவுகளின் படி, அடுத்த ஃபெட் கூட்டத்தில் 25 பேசிஸ் பாயிண்ட்கள் வட்டி குறைப்பதற்கான வாய்ப்பு 89 சதவீதமாக உள்ளது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வட்டி குறைப்பால் பாண்டுகள் மற்றும் வங்கி சேமிப்பு கணக்குகளின் லாபம் குறையும் போது, தங்கம் முக்கியமான முதலீடாக மாறுவது முதலீட்டு சந்தையின் இயல்பு.
டாலர் குறைவு
மேலும் பெடரல் ரிசர்வ் வட்டி குறையும் போது அமெரிக்க டாலர் மதிப்பு குறையும், இதுவும் தங்கத்தின் உலகளாவிய தேவையை உயர்த்த வழிவகுக்கும்.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!



Click it and Unblock the Notifications