சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது சர்வதேச காரணிகளைப் பொறுத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டிருக்க கூடிய மோதல் இந்தியாவில் தங்கத்தின் விலையை பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறது.
சென்னையில் ஆபரண தங்கம் 22 கேரடின் ஒரு கிராம் விலை நேற்றைய தினத்தை விட இன்று 195 உயர்ந்து 9,295 என விற்பனை செய்யப்படுகிறது .ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் 1560 ரூபாய் உயர்ந்து 74, 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1560 உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 212 ரூபாய் உயர்ந்து 10,140 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 1696 ரூபாய் உயர்ந்து 81 ,120 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து 7,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1360 ரூபாய் உயர்ந்து 61 ,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூன் 11 - 8 சவரன் தங்கம் - ரூ.72,160
ஜூன் 12 - 8 சவரன் தங்கம் - ரூ.72,800
ஜூன் 13 - 8 சவரன் தங்கம் - ரூ.72,360
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி ஒரு கிராம் 1.10 ரூபாய் 120 ரூபாய்க்கும் 100 கிராம் வெள்ளி 110 ரூபாய் உயர்ந்து 12,000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்ச்சூழல் ஏற்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றம் சர்வதேச சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் போர் பதற்றம் ஏற்படும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி தான் வருவார்கள். தற்போது கச்சா எண்ணெய் விலையும் இந்த போர் பதற்றத்தால் உயர்ந்துள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை பாதிக்கும். அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என கூறினாலும் ஈரான் அதனை ஏற்பதாக தெரியவில்லை. எனவே இந்த பதற்றம் தற்போதைக்கு தணிவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இது இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையை உயர்த்த காரணமாக இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications