ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை திடீரென உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று மாலை ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 150 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று மாலை 1,06,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சென்னையில் இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,07,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னை மட்டுமில்லாமல் கோவை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,618 ரூபாய்க்கும், 10 கிராம் 1,46,180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது 10 கிராமுக்கு 1,630 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 18 கேரட் தங்கம் 11,160 ரூபாய்க்கும், ஒரு பவுன் 89,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே வேளையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 5000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. நேற்று 245 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 250 ரூபாய்க்கும் , ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கு விற்பனையான நிலையில் ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் விலை உயர்ந்து 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்ந்ததே இந்தியாவிலும் விலை உயர்வதற்கு காரணம். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,070 டாலராகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 60 டாலர்கள் ஆகவும் உயர்ந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்திருந்தாலும் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து சவரனுக்கு சுமார் 27000 ரூபாய் வரை குறைந்து தான் இருக்கிறது. எனவே தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்னும் விலை குறையுமா உயருமா என காத்திருக்காமல் இப்போதே வாங்கி வைப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

