தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே தடுமாற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் பெரியளவில் ஏற்றம் காணமல் சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது தங்கம் விலை இனியும் சரிவினைக் காண வழிவகுக்கலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் சர்வதேச சந்தையில் 1840 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், இது மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பானது வலுவாக இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு வட்டியில்லா முதலீடான தங்கத்தில் அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தடுமாற்றம்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தொடர்ந்து செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
இதனை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க தரவுகள் அனைத்தும் சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்குவித்துள்ளன. இது மேற்கோண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நீண்டகால காரணிகள் எதுவும் இதுவரையில் மாற்றம் கண்டதாக தெரியவில்லை. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கோபம் அதிகரிக்கலாம்
இது மேற்கொண்டு ரஷ்யாவின் கோபத்தினை அதிகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் எனில், மறுபுறம் கூடுதலாக ரஷ்யாவின் மீது தடைகளை விதிக்க அமெரிக்க திட்டமிட்டு வருகின்றது. ஆக இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நீண்டகால நோக்கில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.95 டாலர்கள் அதிகரித்து,1847.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.19% குறைந்து, 21.848 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 56,149 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிக விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 192 ரூபாய் குறைந்து, 65,860 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிக விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5275 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5755 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 57,550 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக பெரியளவில் இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 72,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications