1 லட்சத்தில் ஆட்டம் போடும் தங்கம்.. இனியும் உயருமா..? தங்கத்தை எப்போது வாங்கலாம்..? நிபுணரின் அட்வைஸ்..!!

தங்கத்தின் விலை இன்று MCX சந்தையின் காலை வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது, ஆனால் மாலையில் படிப்படியாக குறைந்து மீண்டும் 99000 அளவீட்டில் வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளதால் ரிஸ்க் எடுக்க மனமின்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை கணிசமாக உயர்ந்தது, இதன் விலையும் உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் உயர்ந்து வருகிறது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஆகஸ்ட் மாத எதிர்கால ஒப்பந்தங்களுக்கான தங்க விலை 10 கிராமுக்கு ரூ.1,01,078 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, காலை நேரத்தில் பிற்பகுதியில் ரூ.1,00,290 என்ற அளவில் நிலைபெற்றது. மாலை வர்த்தகத்தில் 1 சதவீதம் சரிந்து 99,000 ரூபாய்க்கு அளவுக்கு வந்தது.

1 லட்சத்தில் ஆட்டம் போடும் தங்கம்.. இனியும் உயருமா? தங்கத்தை எப்போது வாங்கலாம்? நிபுணரின் அட்வைஸ்..!

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 4 நாள் தொடர் உயர்வுக்கு லீவ் விட்டு 150 ரூபாய் குறைந்து 93,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 1,01,510 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 136 ரூபாய் குறைந்து 81,208 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 1,19,900 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 190 ரூபாய் உயர்ந்து 34,180 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்..? முதலீட்டாளர்கள் எப்போது தங்கம் வாங்கலாம் என்பது குறித்து முதலீட்டு சந்தை நபுணர்கள் பல்வேறு கருத்துகளை வழங்கி வரும் வேளையில் அதை தொகுத்து தமிழ் குட்ரிட்டன்ஸ் உங்களுக்காக வழங்க உள்ளது.

வென்சுரா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவு தலைவர் என்.எஸ். ராமஸ்வாமி தங்கம் மீதான முதலீட்டு குறித்து கூறுகையில், "உலகளாவிய அபாயத் தவிர்ப்பு மனநிலை (risk-off sentiment) தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது," என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "2025ஆம் ஆண்டில் உலகளாவிய மத்திய வங்கிகள் 1,000 டன்களுக்கு மேல் தங்கத்தை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக மத்திய வங்கிகள் அதிகமாக தங்கக் கொள்முதல் வாங்க உள்ளது. இதனால் தங்கம் முக்கியமான முதலீட்டு பிரிவாக தொடர்ந்து இருக்கும்" என உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதோடு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க பணவீக்கம் - வட்டி குறைப்பு மற்றும் உள்நாட்டு விலை உயர்வு ஆகியவை தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடன் வைத்திருக்க முக்கியமான காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல்-ஈரான் மோதல் மட்டுமல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

காமா ஜுவல்லரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோலின் ஷா கூறுகையில், "ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்நாட்டு தங்க விலைகளை மேலும் உயர்த்தியுள்ளது. இருப்பினும், ரூ.1 லட்சத்தைத் தாண்டிய விலைகள் குறுகிய காலத்தில் தொடர்ந்து நீடிக்கலாம், மேலும் சந்தை ஏற்ற இறக்கத்தால் விலையில் தற்காலிக திருத்தம் (correction) ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ரூ.1,00,200 முதல் ரூ.1,00,500 வரையிலான வரம்பில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடுத்தர காலத்தில் விலையின் திசை உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்தே அமையும்."

அமெரிக்க சந்தை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு (ஜூன் 18) ஆகியவை தங்கத்தின் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளன. முதலீட்டாளர்கள் ஃபெடரல் ரிசர்வ்-ன் இந்த முடிவை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் செயல்படுவதால், சந்தையில் ஏற்ற இறக்கம் நீடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதேவேளையில் உலகளாவிய சந்தையில் தங்கத்தின் ஆதரவு நிலைகள் (support levels) 3,400 டாலர் மற்றும் 3,345 டாலர் ஆகவும் உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு அறிவுரை: தங்கத்தின் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக இருந்தாலும், சந்தை ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் கொள்கை அறிவிப்பு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் ஆகியவை அடுத்தகட்ட விலை நகர்வுகளை தீர்மானிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+