ஈரான் போர் மற்றும் ஏஐ துறை முதலீடுகளில் ஏற்பட்ட சரிவுக்கு பின்பு தங்கம் முக்கியமான முதலீடாக மாறினாலும் 4100 டாலருக்கு மேல் தாண்ட முடியாமல் தவித்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி விகித உயர்வை தள்ளிவைத்த பின்பும், பணவீக்கம் குறித்த அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பும் தங்கம் விலை உயரவில்லை.

இதற்கு அடிப்படை காரணம் பெட் முடிவுகளுக்கு பின்பு டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது, ஈரான் போர் மீண்டும் சூடுப்பிடித்துள்ள காரணத்தால் வளைகுடா பகுதியில் தொடர்ந்து போர் அச்சம் நீடித்து வருகிறது.
இதன் விளைவாக தங்கம் விலை உயர முடியாமல் தவித்து வருகிறது, இன்று ஸ்பாட் சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 0.69 சதவீதம் வரையில் சரிந்து 4075 டாலராக உள்ளது. இதேபோல் இந்தியாவின் கமாடிட்டி சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.44 சதவீதம் சரிந்து 1,42,601 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதுவே ரீடைல் சந்தையில் எடுத்துக்கொண்டால் சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 22 ரூபாய் குறைந்து 13,255 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 3வது நாளாக 235 ரூபாயிலேயே வர்த்தகமாகி வருகிறது.
டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏறுமுகத்தை தாண்டி, ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் காரணத்தால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்க முடியவில்லை, இதன் காரணமாகவும் தங்கம் தனது பொழிவை இழந்து வருகிறது.
செப்டம்பர் கூட்டத்தில் பெட் வட்டியை உயர்த்தினால் தங்கம், வெள்ளி விலை பெரும் சரிவை எதிர்கொள்ளும்.
இதனால் ஈரான் போர் முடிவுக்கு வராத பட்சத்தில் இனி வரும் காலக்கட்டத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை மட்டுமே எதிர்கொள்ளும், இல்லையெனில் பெரும் நிதி நெருக்கடி, பொருளாதார சவால்கள் உருவானால் தங்கம் மீண்டும் ஏறுமுகத்தை காணலாம்.
இதற்கு அடிப்படை காரணம் ஈரான் போர் கச்சா எண்ணெய் விலை உயரும் வரையில் டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும், டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் போது முதலீட்டு சந்தைக்கு தங்கத்தின் தேவையும், அவசியமும் இல்லை.


Click it and Unblock the Notifications

