தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியுமா? இந்தியாவில் விலை எப்படியுள்ளது. இனி விலை என்னவாகும்? நிபுணர்களின் கணிப்பு என்ன?
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இன்றும் நாளையும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதனை பொறுத்து விலையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்கு தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம்.
முக்கிய சப்போர்ட் லெவல்
தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், அதன் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது தற்போதைக்கு செல்லிங் அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உச்சத்தினை எட்டி வந்த நிலையில், தற்போது புராபிட் புக்கிங்கும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கப்போகிறதோ?
கடந்த இரண்டு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த டாலரின் மதிப்பானது, இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் இன்று நாளையும் நடக்கவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில், எந்த மாதிரியான நடவடிக்கை இருக்க போகிறதோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
நீடிக்கும் அரசியல் பதற்றம்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த போக்கானது இன்னும் சில காலத்திற்கு தொடரலாமோ என்ற அச்சமே இருந்து வருகின்றது. ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு, நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீரோ கோவிட் பாலிசி
சீனா ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக தங்கத்தின் தேவை குறைந்துள்ள நிலையில், தற்போது சீனாவிலும் தேவை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதோடு முதலீட்டாளர்கள் டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் கவனம் செலுத்தலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 1792 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது 1789 டாலர்களாக உடைத்தால் இன்னும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 1% அதிகரித்து, 23.587 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் 54,000 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியது. இதே இன்று இந்திய சந்தையிலும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது, 28 ரூபாய் அதிகரித்து, 54,160 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியுள்ளது. இதே வெள்ளியின் விலையானது, 302 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 68,078 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5040 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 40,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5442 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 54,420 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 0.20 பைசா அதிகரித்து, 73 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 73,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!



Click it and Unblock the Notifications