இந்திய மக்களுக்கு தற்போது மிகவும் முக்கியமான காலக்கட்டம், நாடு முழுவதும் திருமணங்கள் நடக்கும் முக்கியமான Wedding Season என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் வருடத்தின் இறுதியில் உச்சத்தை தொட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் சர்வதேச சந்தையும் சேமிப்புகாகவும், திருமணங்களுக்காகவும் தங்கத்தை வாங்குவோருக்கு எதிராக செயல்படுகிறது.
அமெரிக்க பொருளாதார தரவுகள் பலவீனமாக இருக்கும் என கணிக்கப்படும் வேளையில் டாலர் மதிப்பு சரிவு, பணவீக்க பிரச்சனை, அதீத கடன் சுமை என பல பிரச்சனைகள் அந்நாட்டை சூழ்ந்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு சந்தையில் பணத்தை போட முடிவு செய்ததின் எதிரொலியாக தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்க துவங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2012 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய மதிய வர்த்தகத்திற்கு பின் குறிப்பாக அமெரிக்க சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பு தங்கம் விலை தடாலடியாக உயர துவங்கியது. இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2051 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தாக்கம் கட்டாயம் இந்திய சந்தையில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டது போலவே எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.08 சதவீதம் உயர்ந்து 62,772.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் டிசம்பர் மாத பியூச்சர்ஸ் ஆர்டரில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.14 சதவீதம் உயர்ந்து 77,104 ரூபாயாக உள்ளது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 58,700 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 64,040 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 46,960 ரூபாயாக உள்ளது.
இதை தொடர்ந்து ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 700 ரூபாய் உயர்ந்து 82,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 570 ரூபாய் உயர்ந்து 25,170 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications