அதிர்ச்சி தந்த தங்கம்.. இந்த மாசத்துலயே இது தான் முதல்முறை..!! தீபாவளி வேற வரப்போகுது..!!

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே சரிவிலேயே இருந்து வந்த தங்கம் இன்று திடீரென விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 105 ரூபாய் விலை உயர்ந்து 13,815 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாதத்திலேயே இது தான் அதிகபட்ச விலை. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 840 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,10,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதிர்ச்சி தந்த தங்கம்..  இந்த மாசத்துலயே இது தான் முதல்முறை..!! தீபாவளி வேற வரப்போகுது..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இந்த 9 நாட்களில் தங்கம் விலை 3 நாட்கள் விலை குறைந்துள்ளது, 3 நாட்கள் விலை உயர்ந்துள்ளது,3 நாட்கள் விலை மாறவில்லை. இந்த மாதத்திலேயே இன்று தான் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 100 ரூபாய்க்கு மேலும் சவரனுக்கு 800 ரூபாய்க்கு மேலும் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 15,071 ரூபாய்க்கும் 10 கிராம் 1,50,710 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,350 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 7 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

Also Read

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு 4,179 டாலர்களாக உள்ளது, எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 1,50,864 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்தியாவில் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாகும்.

Recommended For You

தீபாவளி பண்டிகை வேறு வர இருப்பதால் தங்கம் விலை திடீரென உயர்ந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை சிறிது காலம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஈரான் போர் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலை ஒரு நிலைக்கு வரும் போது தான் தங்கம் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கம் சரியாகும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+