தங்கம் விலை: ஷாக் மேல ஷாக்.. ஒரு வாரத்தில் ரூ.5,757 உயர்வு.. இனி இறங்கவே இறங்காது போலியே..!!

உலகளாவிய தங்க வர்த்தக சந்தையில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தது மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது தான். இந்த இரண்டு காரணிகளும் தங்கத்தின் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா - சீனா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகள் மத்தியில் நிலவும் வர்த்தக போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தது வருகிறது. இதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பும் எப்போதும் இல்லாமல் பல வருடத்திற்கு பின்பு சரிந்தது வருகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சீனா தவிர மற்ற நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி விதிப்புகளை நிறுத்தி வைத்ததுள்ளது. இதனால் அமெரிக்க டாலர் இருப்பு அதிகளவில் விற்கப்பட்ட காரணத்தால் அதன் மதிப்பு குறைந்து தங்கத்தின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

தங்கம் விலை: ஷாக் மேல ஷாக்.. ஒரு வாரத்தில் ரூ.5,757 உயர்வு.. இனி இறங்கவே இறங்காது போலியே..!!

இந்த நிலையில் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.93,887 ஆக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.93,940 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.88,130 ஆக இருந்தது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.5,757 உயர்ந்து, தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 6.53% லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. டிரம்ப் 75 நாடுகள் மீது விதித்த ரெசிப்ரோக்கல் வரிகளை நீக்கவிட்டு 10 சதவீத அடிப்படை வரி மட்டுமே விதித்திருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் குவிய துவங்கியதால் சரிவில் இருந்து மீண்டும் உயர துவங்கியுள்ளது.

இதேவேளையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில், ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் விலை 3,245 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,236.21 ஆக முடிந்ததுள்ளது.

அமெரிக்க டாலர், கடந்த வாரம் முழுவதும் கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தது. இதனால் அமெரிக்க டாலர் குறியீடு (US Dollar Index) இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக 100-க்கும் கீழே சென்றது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாலர் குறியீடு 99.89 ஆக முடிந்தது. இது 0.72% சரிவாகும் இதுதான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சந்தையின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து முதலீடு செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+