சென்னை: சமீப காலமாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.பெண்களுக்கு மிகவும் பிடித்த பொருள்களில் தங்கமும் ஒன்று. அதிக அளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடிக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்க நகை 53,630 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
மேலும் ஒரு கிராம் தங்க நகை ரூபாய் 6,750க்கு விற்கப்பட்டது. இது நேற்றைய முன் தினத்தை விட 35 ரூபாய் அதிகமாகும். இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 53,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூபாய் 6,725 ஆக உள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கேரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 57,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் இந்தியாவில், வெள்ளி விலை கிலோவுக்கு 85,600 ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை: டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 6260 க்கு விற்கப்படுகிறது. மேலும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 72,120 ரூபாயாக உள்ளது. மும்பையில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 66,110 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அஹமதாபாத்தில், 22 கேரட் தங்கத்தின் விலை 66,160 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,170 ரூபாய்க்கும், சென்னையில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 67,060 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கத்தின் விலை 73,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 66,110 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. குருகிராமில் 22 கேரட் தங்கத்தின் விலை 66,260 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,270 ரூபாய்க்கும், லக்னோவில் 22 கேரட் தங்கத்தின் விலை 66,260 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெங்களூரில், 22 கேரட் தங்கத்தின் விலை 66,110 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஜெய்ப்பூரில், 22 கேரட் தங்கத்தின் விலை 66,260 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பாட்னாவில், 22 கேரட் தங்கத்தின் விலை 66,160 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஹைதராபாதில், 22 கேரட் தங்கத்தின் விலை 66,110 மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை 72,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications