மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.. 9 மாத உச்சத்தில் தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.1500 ஏற்றம்!

தங்கம் விலையானது இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இது டாலரின் மதிப்பானது சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் தான் தங்கம் விலையானது 9 மாத உச்சமான 54,745 ரூபாயினை 10 கிராமுக்கு எட்டியுள்ளது.

இதே வெள்ளி விலையானது 2.3% அதிகரித்து, 69,065 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் இது வரவிருக்கும் சந்தை அமர்வுகளில் எப்படியிருக்கும்? ஆபரண தங்கம் விலை எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலரால் தங்கம் விலை ஏற்றம்

டாலரால் தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது 103.66 என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டது.

பேங்க் ஆப் ஜப்பானும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், ஜப்பானின் யென் மதிப்பும், பத்திர சந்தையும் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பாட் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.1% அதிகரித்து 1806.34 டாலர்களை எட்டியுள்ளது. இதே வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 3.3% அதிகரித்து, 23.71 டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஈக்விட்டியில் செல்லிங் அழுத்தம்

ஈக்விட்டியில் செல்லிங் அழுத்தம்

சர்வதேச ஈக்விட்டி சந்தையில் இரண்டாவது ரவுண்ட் செல்லிங் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலையானது சற்றே சரிந்து தற்போது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதே சீனாவின் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் மோசமான தாக்கம் அதிகரித்துள்ளது. இதே எஸ் & பி 500ல் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு குறைந்த மட்டத்தில் முடிவடைந்துள்ளது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் கடந்த இரு அமர்வில் 1770 டாலர்கள் என்ற லெவலை எட்டி, அதன் பிறகு மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 1805 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையில் 54,800 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இதே டாலரின் மதிப்பானது 103.75 டாலராக சரிவினைக் கண்டுள்ளது. தங்கம் விலையானது ரெசசன் அச்சத்தின் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 54,250 - 55,250 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

தங்க பத்திரம் நல்ல சான்ஸ்

தங்க பத்திரம் நல்ல சான்ஸ்

நடப்பு ஆண்டில் தங்க பத்திரத்தின் மூன்றாவது சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விலையானது ஒரு கிராமுக்கு 5409 ரூபாயாக உள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால நோக்கில் இது சரியாக வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். இதற்கு வட்டி விகிதம் 2.55 ஆகும்,

நீண்டகால சரியான வாய்ப்பு

நீண்டகால சரியான வாய்ப்பு

சர்வதேச அளவில் நிலவி வரும் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனாவில் நிலவி வரும் நெருக்கடி, ரெசசன் அச்சம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக தங்கமானது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் ஒரு பாதுகாப்பு புகலிடமான பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+