இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம், தற்போது உலக நாடுகளின் முக்கிய சேமிப்பாக மாறியுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வரும் காரணத்தால் தங்கம் தற்போது பங்குச்சந்தையை காட்டிலும் அதிகம் லாபம் தரும் கருவியாக மாறியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை உலகளவில் அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாக, முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக விலைமதிப்பற்ற உலோகமான தங்கம் வரலாறு காணாத உயரத்திற்கு உயர்த்தக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

Goldman Sachs தனது அறிக்கையை, உலகளாவிய முதலீட்டாளர்களின் மனநிலை மாற்றம், மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் போக்கு மற்றும் பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
ஷாக் கொடுக்கப்போகும் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் செப்டம்பர் 5ஆம் தேதி காலை நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் 3559 டாலராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கோல்ட்மேன் சாக்ஸின் அறிக்கையின் படி, தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 5000 டாலர்களை எட்டும் என கணித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 10 கிராமுக்கு 1,55,000 ரூபாய் என்ற வான் அளவை எட்டும் என்று தங்கம் விலை மீதான கணிப்பை முன் வைத்துள்ளது.
இன்று நாணய சந்தை மதிப்பில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 88.30 டாலராகும். இதை 5000 டாலருக்கு கணக்கிட்டால் 4,41,517.50 ரூபாய், ஒரு அவுன்ஸ் என்பது 28.3495 கிராம். இதன் மூலம் 10 கிராம் தங்கம் விலை 155740 ரூபாயாக இருக்கும்.
இன்றைய ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,07,620 ரூபாய் மட்டுமே, இது தற்போதைய சந்தை விலைகளை விட கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வைக் குறிக்கிறது.

தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மீதான நம்பிக்கை குறைவது இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ள தனியார் முதலீடுகளில் வெறும் 1 சதவீதம் தங்கத்திற்கு மாறினால், தங்கம் விலை எளிதாக 5000 டாலர் இலக்கை எட்ட முடியும் என்று கோல்டுமேன் சாக்ஸ் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த செப்டம்பர் மாதம் 16-17 ஆம் தேதிகளில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் வட்டி குறைப்பிற்காக வாய்ப்புகள் 87 சதவீதம் இருப்பதாக தெரியும் நிலையில் தங்கம் விலை இந்த மாத இறுதிக்குள் பெரும் உயர்வை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை பல்வேறு சூழ்நிலைகளில் கணிப்பு
தங்க விலையின் உயர்வு, உலகளாவிய மாற்றங்களைப் பொறுத்து வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கூறியுள்ளது.
முதலீடு மற்றும் வர்த்தக சந்தையில் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4000 டாலர்களை (தோராயமாக 10 கிராமுக்கு 1,25,000 ரூபாய்) எட்டலாம்.
இதுவே உலகளவில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் மேலும் அதிகரித்தால், விலை 4500 முதல் 5000 டாலர்கள் வரை உயர வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்களின் திடீர் மனநிலை மாற்றம்
சமீப காலமாக பொருளாதாரத்தில் பெரும் தடுமாற்றம் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பங்குச் சந்தைகளில் இருந்து தங்கத்திற்கு மாற்றி வருவதாக பல அறிக்கைகள் உறுதி செய்து வருகிறது. இதோடு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்க இருப்பு அதிகரிப்பால் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிற உலோகம்
கோல்ட்மேன் சாக்ஸ் தங்கம் மட்டுமல்லாமல், காப்பர் மற்றும் அமெரிக்க இயற்கை எரிவாயு ஆகியவற்றிலும் அதிகப்படியான நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், எண்ணெய் சந்தையில் தற்போது அதிகப்படியான விநியோகம் நிலவும் காரணமாக இதன் விலை உயர்வு மந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கத்தின் மீதான முதலீட்டு முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில் மற்ற பொருட்களை விட தங்கம் தற்போது மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
More From GoodReturns

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?



Click it and Unblock the Notifications