தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 1840 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது. இது கடந்த மூன்று அமர்வுகளாகவே சற்றே ஏற்றம் காணத் தொடங்கியிருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படும் நிலையில், இது எதிர்பார்த்ததை காட்டிலும் மேலாகவே காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பத்திர சந்தையும் நவம்பர் மாதத்தில் இருந்து முதல் முறையாக பார்க்கும்போது, 4% மேலாக காணப்படுகின்றது. ஆக இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
தொடர்ந்து அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இனியும் அதிகரிக்கலாம் என்ற போக்கே இருந்து வருகின்றது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இது மட்டும் அல்ல வேலை சந்தையும் மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் சர்வதேச சந்தையில் விலை சரிவானது மேற்கொண்டு ஆபரணத் தங்கம் விலையிலும் வரவிருக்கும் நாட்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய லெவல்
தங்கத்தின் முக்கிய லெவல் ஆனது மேற்கொண்டு 1823 - 1810 டாலர்கள் வரையில் சரிவினைக் காணலாம். இதே முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 1823 - 1805 டாலர்களையும், ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 1850 - 1865 டாலர்களையும் தொடலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதே இந்திய சந்தைய்யில் சப்போர்ட் லெவல் ஆக 55,580 - 55,300 ரூபாயினையும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 56,180 ரூபாயினையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.50 டாலர் குறைந்து, 1838.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.56% குறைந்து, 20.973 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 56 ரூபாய் குறைந்து, 55,775 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 415 ரூபாய் குறைந்து, 63,525 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 5243 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 41,944 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 57,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 70,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications