எகிறிய தங்கம் விலை.. இந்த ஏற்றத்திலும் வாங்கலாமா.. குறையவே குறையாதா?

டெல்லி: தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கம் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக தங்கம் (Gold) விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் 10 கிராமுக்கு தங்கம் விலையானது 51,999 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1701 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது.

கடந்த வாரத்தின் முடிவு விலையான 1660 டாலரினை நடப்பு வாரத்தில் 41 டாலர்கள் அதிகரித்து, 1701 டாலர்கள் என்ற லெவலில் ஸ்பாட் கோல்டின் விலையானது முடிவடைந்துள்ளது.

இலக்கு விலை

இலக்கு விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் 12% கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு தங்கம் விலையானது தீபாவளிக்குள் 53,000 ரூபாயினை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

புராபிட் புக்கிங் இருக்கலாம்

புராபிட் புக்கிங் இருக்கலாம்

எனினும் தங்கத்தில் புராபிட் புக்கிங்கும் இருக்கும் என்பதால், தங்கம் விலையானது 51,200 - 51000 ரூபாய் என்ற லெவலுக்கு கிடைத்தால் வாங்கலாம். இதே ஸ்பாட் சந்தையில் அவுன்ஸூக்கு 1680 டாலர் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது 1780 என்ற லெவலை இந்த மாத இறுதிக்குள் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது 1701 என்ற லெவலில் காணப்படுகின்றது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலையானது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது 3.54% என்ற அளவுக்கு ஏற்றத்தில் காணாப்படுகின்றது. இது பணவீக்கத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமாக உள்ளது, கச்சா எண்ணெய் விலை சுமார் 12% கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை மேற்கொண்டு அதிகரிக்க காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

ஏற்கனவே மத்திய வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. அதேசமயம் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகளை அதிகரிக்கலாம்

செலவுகளை அதிகரிக்கலாம்

பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது சம்பள செலவு உள்ளிட்ட செலவினங்களையும் நிறுவனங்களுக்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது வேலையின்மை, புதிய வேலை வாய்ப்புகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அமெரிக்க மத்திய வங்கியானது மற்றொரு முறை வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, இன்று மாற்றமின்றி கிராமுக்கு 4840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 5280 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,240 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று கிராமுக்கு, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 666 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.48,400

மும்பை - ரூ.47,850

டெல்லி - ரூ.48,000

பெங்களூர் - ரூ.47,900

 

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,400

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+