6வது நாளாகத் தங்கம் விலை சரிவு.. உச்ச விலையில் இருந்து 9000 ரூபாய் குறைந்தது..!

சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாகவும், தங்கம் மீதான அதீத முதலீட்டுக் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சாமானிய மக்கள் நீண்ட காலமாகத் தங்க நகைகளை வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாகப் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தங்கம் விலை பெரிய அளவில் குறைந்து வரும் காரணத்தால் தற்போது நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பட்ஜெட்டுக்குப் பின் அதிரடி

பட்ஜெட்டுக்குப் பின் அதிரடி

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியைக் குறைந்தது தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தங்கம் மற்றும் தங்கம் நகை சந்தைக்கான தேவையைப் பெருமளவில் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை, சர்வதேச சந்தையின் தங்கம் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்


பட்ஜெட் அறிக்கை வர்த்தகச் சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் மிகவும் சாதகமாக இருந்த காரணத்தால் கடந்த ஒரு வாரமாக வெளிநாட்டில் இருந்து வரும் அன்னிய முதலீட்டின் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள அதிரடி வளர்ச்சி.

இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு வலிமை அடைந்துள்ளது.

 

MCX சந்தையில் தங்கம் விலை

MCX சந்தையில் தங்கம் விலை

இந்திய உலோக வர்த்தகச் சந்தையான MCX சந்தையில் ஏப்ரல் மாதத்திற்கான தங்கம் பியூச்சர் விலை அளவுகள் 5 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், 6வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.

MCX சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.07 சதவீதம் சரிந்து 47,223 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை MCX சந்தையின் ஏப்ரல் மாதத்திற்கான ஆர்டரின் விலை 0.23 சதவீதம் சரிந்து 68,582.00 ரூபாயாகக் குறைந்துள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே சரிந்துள்ள நிலையில் சாமானிய மக்கள் நீண்ட காலமாகத் தங்க நகைகளை வாங்க முடியாமல் தவித்தவர்களுக்குத் தங்கம் வாங்கச் சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.

 

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

பட்ஜெட்டுக்கு முன் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் இந்தியப் பங்குச்சந்தையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டதட்ட ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 72.84 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதன் வாயிலாகச் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,3,354 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் 10.30 மணி அளவில் இதன் விலை 1,31,884,21 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுவே டாலர் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,820 டாலரில் இருந்து 1810.85 டாலராகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

மேலும் உலக நாடுகளின் பங்குச்சந்தையின் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் தங்கத்தின் மீது செய்யப்பட்டு இருந்த முதலீடுகள் தற்போது பெருமளவில் பங்குச்சந்தைக்கு வந்துள்ளது, இதனால் முதலீட்டுச் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றால் மிகையில்லை.

கொரோனா காலப் பாதிப்பு

கொரோனா காலப் பாதிப்பு

இதேபோல் பல நாடுகள் கொரோனா காலப் பாதிப்பில் இருந்து மீண்டு வர பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்கான நிதி தேவை புதிதாக அச்சடிக்கும் நாணயங்களின் வாயிலாகவும், நாணய மதிப்புப் பாதிக்கப்படக் கூடாது எனத் திட்டமிடும் நாடுகள் தனது கருவூலத்தில் இருக்கும் தங்கத்தை ரீடைல் சந்தையில் விற்பனை செய்து பணமாக மாற்றியுள்ளது.

இதனால் வழக்கத்தை விடவும் வர்த்தகத்திற்கும் அதிகமான தங்கம் வர்த்தகச் சந்தையில் இருப்பதால் தங்கம் விலை பெரிய அளவில் பாதித்துள்ளது.

 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

பொதுவாக ரீடைல் சந்தையில் ஒவ்வொரு மாநிலத்திலும், நகரங்களிலும் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாறுபடும். இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+