மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு சரிந்திருக்கு தெரியுமா?

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது மேற்கொண்டு சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இது தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது.

சாதகமான தரவு

சாதகமான தரவு

அமெரிக்காவின் வேலையின்மை தரவானது சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. இது டாலரின் மதிப்பானது மேலும் வலுவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது இந்த வாரத்தின் பிற்பாதியில் வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாதங்களை விட மெதுவான நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மீண்டும் பணவீக்கம் உச்சம் எட்டினால், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை அமர்விலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1673.20 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை இன்று சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 0.51% குறைந்து, 19.505 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 189 ரூபாய் குறைந்து, 50,836 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 568 ரூபாய் குறைந்து, 58,542 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, 4740 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து, 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 5171 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 568 ரூபாய் குறைந்து, 41,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 710 ரூபாய் குறைந்து, 51,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 0.80 பைசா குறைந்து, 64 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 640 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 64,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,400

மும்பை - ரூ.46,900

டெல்லி - ரூ.47,050

பெங்களூர் - ரூ.46,950

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,400

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+