தங்கம் விலை இன்று எப்படி.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்கள் கணிப்பு என்ன?

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து சமீபத்திய நாட்களாகவே சரிவினைக் கண்டு வந்தது. தற்போதும் கூட சர்வதேச சந்தையில் சற்று குறைந்திருந்தாலும், இது மீண்டும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று வலுவாகவே காணப்படுகிறது.

இது பணவீக்கம் மீண்டும் அதிகரித்தால் மீண்டும் வட்டி அதிகரிப்புக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம். அமெரிக்க ரிசர்வ் வங்கியானது மீண்டும் இந்த முறையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கமானது பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், பணவீக்கம் அதிகரித்தால் அது நிச்சயம் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பணவீக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது வட்டியில்லா முதலீட்டில் முதலீட்டினை குறைக்கலாம் என்றாலும், ரெசசசன் காரணமாக தங்கம் விலை மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comex தங்கம் விலை?

Comex தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 1.05 டாலர்கள் குறைந்து, 1676.30 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 Comex வெள்ளி விலை?

Comex வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து, 18.975 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

MCX தங்கம் விலை?

MCX தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, 50,999 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

MCX வெள்ளி விலை?

MCX வெள்ளி விலை?

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 111 ரூபாய் அதிகரித்து, 57,436 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4740 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 5171 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 88 ரூபாய் அதிகரித்து, 41,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 51,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 0.50 பைசா குறைந்து, 62.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 625 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 62,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,400

மும்பை - ரூ.46,750

டெல்லி - ரூ.46,900

பெங்களூர் - ரூ.46,800

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,400

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+