டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் வலுவான டாலரின் மதிப்புக்கு மத்தியில், அழுத்தத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பத்திர சந்தையும் தொடர்ந்து மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.
இது விழாக்கால பருவத்தில் ஆபரண தங்கம் விலை குறைய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க ஆர்வலர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
வட்டியில்லா முதலீடு
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் கண்ணோட்டம், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம்.
இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையலாம்.
உற்பத்தி அதிகரிப்பு
சமீபத்திய காலமாகவே நிலவி வரும் பணவீக்கத்தின் மத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எனினும் தற்போது அந்த நிலையானது மாறத் தொடங்கியுள்ளது. தற்போது உற்பத்தி விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இது தங்கத்தில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தின் நிலை
தொடர்ந்து அமெரிக்க பணவீக்கம் அதிகரித்து வந்த நிலையில், மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வந்தது. இது தற்போது பணவீக்கம் குறைய வழிவகுத்துள்ளது.
இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை குறைக்க வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1654.20 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து, 18.663 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும், தங்கம் விலையானது குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து, 50,310 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 45 ரூபாய் குறைந்து, 56,308 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்சம் விலை என எதனையும் உடைக்கல்வில்லை. ஆக மீடியம் டெர்மில் பெரியளவில் தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4700 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 5127 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்து, 41,016 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 51,270 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 30 பைசா குறைந்து, 61.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 615 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 61,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,000
மும்பை - ரூ.46,550
டெல்லி - ரூ.46,700
பெங்களூர் - ரூ.46,600
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,000


Click it and Unblock the Notifications