டெல்லி: தங்கம் (Gold) விலையானது இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர சந்தை சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
மேற்கண்ட காரணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
முதலீட்டாளர்களின் கவனம்
வரும் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் பண்னை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விலை
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பலவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் என்பது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
ஓபெக் நாடுகளின் முடிவு
ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உற்பத்தி குறைப்பினை செய்ய திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது பெரியளவில் குறையாமல் இது தடுக்கலாம். இதனால் சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
தேவை அதிகரிக்கலாம்
இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் குறையாமல் தடுக்க வழிவகுக்கலாம். கூடாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது பணவீக்கத்தினை அதிகரிக்கலாம். இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 10.85 டாலர்கள் அதிகரித்து, 1731.50 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலை மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 1.61% அதிகரித்து, 20.875 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 238 ரூபாய் அதிகரித்து, 51,880 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 838 ரூபாய் அதிகரித்து, 61,605 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 5280 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40 ரூபாய் அதிகரித்து, 42,240 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 52,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 0.50 பைசா குறைந்து, 66.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 665 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 66,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.48,400
மும்பை - ரூ.47,850
டெல்லி - ரூ.48,000
பெங்களூர் - ரூ.47,900
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,400
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications