இந்திய குடும்பங்களின் முக்கிய முதலீடாக இருக்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இந்திய பெற்றோர்கள் மத்தியில் மாறுபட்ட நிலை நிலவுகிறது. இந்திய பெற்றோர்கள் காலம் காலமாக தங்கத்தின் மீது முதலீடு செய்து முக்கிய செலவுகள் வரும் போது, தங்க நகைகளை விற்பனை செய்தோ அல்லது அடகு வைத்தோ நிதி திரட்டுவது வழக்கம்.
+2 ரிசல்ட் வந்த சூழ்நிலையில், மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்க ரெடியாக இருக்கும் பெற்றோர்கள் தங்கம் விலை உயர்வால் மிகழ்ச்சி உடனும், அடுத்த இரண்டு வருடத்தில் குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க இருக்கும் பெற்றோர்கள் சோகத்துடனும் உள்ளனர்.
தங்கம் விலை உயர்ந்துள்ள காரணத்தால், கல்லூரியில் தங்களது குழந்தைகளை சேர்க்க ரெடியாக இருக்கும் பெற்றோர்கள் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த தங்க நகையை விற்பனை செய்யும் போதோ அல்லது அடகு வைக்கும் போது கூடுதல் பணம் கிடைக்கும். இது குழுந்தைகளை கல்லூரியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு பெரிய அளவில் உதவும்.

மறுமுனையில் தங்கம் விலை உயர்வால் இதில் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் பெற்றோர்களும் தவித்து வருகின்றனர். தங்கம் மீதான முதலீடுகள் படிப்புக்கு மட்டும் அல்லாமல் சொந்த வீடு, சொந்த கார், மருத்துவ செலவு, திருமணம், தொழில் விரிவாக்கம் போன்றவையும் இதில் அடங்கும்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியாவதன் மூலம் கணிசமாக உயர்ந்துள்ளது, கடந்த வார வர்த்தக முடிவில் பதிவான 2 சதவீத சரிவு இன்றைய வர்த்தகத்தில் முழுமையாக ஈடு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2016.90 டாலரில் இருந்து 2022 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.33 சதவீதம் வரையில் உயர்ந்து 60.829.00 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் ஜூலை மாதம் முடியும் வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரில் 0.25 சதவீதம் உயர்ந்து 77,240 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 88 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 120 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45680 ரூபாய், மும்பை - 45280 ரூபாய், டெல்லி - 45400 ரூபாய், கொல்கத்தா - 45280 ரூபாய், பெங்களூர் - 45320 ரூபாய், ஹைதராபாத் - 45280 ரூபாய், கேரளா - 45280 ரூபாய், புனே - 45280 ரூபாய், பரோடா - 45320 ரூபாய், அகமதாபாத் - 45320 ரூபாய், ஜெய்ப்பூர் - 45400 ரூபாய், லக்னோ - 45400 ரூபாய், கோயம்புத்தூர் - 45680 ரூபாய், மதுரை - 45680 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 62,290 ரூபாய், மும்பை - 61,750 ரூபாய், டெல்லி - 61,900 ரூபாய், கொல்கத்தா - 61,750 ரூபாய், பெங்களூர் - 61,800 ரூபாய், ஹைதராபாத் - 61,750 ரூபாய், கேரளா - 61,750 ரூபாய், புனே - 61,750 ரூபாய், பரோடா - 61,800 ரூபாய், அகமதாபாத் - 61,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,900 ரூபாய், லக்னோ - 61,900 ரூபாய், கோயம்புத்தூர் - 62,290 ரூபாய், மதுரை - 62,290 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45680 ரூபாய், மும்பை - 45280 ரூபாய், டெல்லி - 45400 ரூபாய், கொல்கத்தா - 45280 ரூபாய், பெங்களூர் - 45320 ரூபாய், ஹைதெராபாத் - 45280 ரூபாய், கேரளா - 45280 ரூபாய், புனே - 45280 ரூபாய், பரோடா - 45320 ரூபாய், அகமதாபாத் - 45320 ரூபாய், ஜெய்ப்பூர் - 45400 ரூபாய், லக்னோ - 45400 ரூபாய், கோயம்புத்தூர் - 45680 ரூபாய், மதுரை - 45680 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82700 ரூபாய், மும்பை - 78100 ரூபாய், டெல்லி - 78100 ரூபாய், கொல்கத்தா - 78100 ரூபாய், பெங்களூர் - 82700 ரூபாய், ஹைதராபாத் - 82700 ரூபாய், கேரளா - 82700 ரூபாய், புனே - 78100 ரூபாய், பரோடா - 78100 ரூபாய், அகமதாபாத் - 78100 ரூபாய், ஜெய்ப்பூர் - 78100 ரூபாய், லக்னோ - 78100 ரூபாய், கோயம்புத்தூர் - 82700 ரூபாய், மதுரை - 82700 ரூபாய்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications