தங்கம் வாங்க சரியான நேரமா? ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்க பாருங்க.!!

இன்று, ஜூன் 8 ஆம் தேதி, இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் என்ன என்பதைப் பார்க்கலாம். அமெரிக்காவின் பலவீனமான பொருளாதாரத் தரவுகள் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் குறுகிய கால வட்டி விகித முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான தொலைபேசிப் பேச்சுவார்த்தை போன்ற உலகளாவிய நிகழ்வுகளின் மத்தியில் தங்கத்தின் விலைகள் மிதமான நிலையில் காணப்படுகின்றன.

தங்கம் பாதுகாப்பான முதலீடு: நிபுணர்களின் கருத்து: ஏஞ்சல் ஒன்னில் (Angel One) வேளாண் சாரா பொருட்கள் மற்றும் நாணய ஆராய்ச்சித் துறையின் துணைத் தலைவர் பிரதமேஷ் மல்லையா கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா-சீனா வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகத் தங்கம் இப்போதும் முதலீட்டாளர்களுக்குப் பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் (Reliance Securities) நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஜிகர் திரிவேதி, முதலீட்டாளர்கள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல்களை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

தங்கம் வாங்க சரியான நேரமா? ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்க பாருங்க.!!

மொத்தத்தில், இந்த நிலையற்ற சந்தைச் சூழ்நிலைகளில், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பாதுகாப்பான முதலீடாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். கடந்த ஆண்டில், தங்கத்தின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், 2001 ஆம் ஆண்டு முதல் 15 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) ஈட்டியுள்ளது என்றும் தரவுகள் காட்டுகின்றன. மேலும், 1995 ஆம் ஆண்டு முதல், தங்கம் பணவீக்கத்தை 2-4 சதவீதத்திற்கும் மேலாக முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலைகள்: ஜூன் 8 ஆம் தேதி காலை 6:40 மணி நிலவரப்படி, MCX தங்கக் குறியீடு 10 கிராமுக்கு ரூ.97,051ஆகவும், MCX வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் இருந்தது.

இந்தியன் புல்லியன் அசோசியேஷன் (IBA) தரவுகளின்படி, ஜூன் 8 ஆம் தேதி காலை 6:40 மணிக்கு, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.97,150 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கிற்கு ரூ.89,054 ஆகவும் இருந்தது. மேலும், IBA வலைத்தளத்தின்படி, இன்று 999 தூய்மையான வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,05,900 ஆக உள்ளது.

நகரங்களின் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்: சில்லறை வாடிக்கையாளர்களுக்கு, நகைக்கடைக்காரர்கள் பில்லில் உற்பத்தி கட்டணம், வரிகள் மற்றும் ஜிஎஸ்டியைச் சேர்க்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இது இறுதி விலையை உயர்த்தக்கூடும்.

முக்கியமாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தின் விலை ஆனது 10 கிராமுக்கு ரூ.97,260 ஆகவும், MCX தங்க விலை 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,06,020 ஆகவும், MCX வெள்ளி 999 விலை கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் விற்பனையாகிறது.

மும்பையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்: தங்கத்தை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு ரூ.96,970 ஆகவும், MCX தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 கிலோவிற்கு ரூ.1,05,710 ஆகவும், MCX வெள்ளி 999 விலை கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் உள்ளது

டெல்லியில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்: தங்கத்தை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு ரூ.96,800, MCX தங்கம் 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. அதேபோல், வெள்ளி கட்டி விலை கிலோவிற்கு ரூ.1,05,520 ஆகவும், MCX வெள்ளி 999 விலை கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் உள்ளது.

கொல்கத்தாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை: தங்கத்தை பொறுத்தவரை கொல்கத்தாவில் 10 கிராமுக்கு ரூ.96,850 ஆகவும், MCX தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,05,570 ஆகவும், MCX வெள்ளி 999 கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் உள்ளது.

ஹைதராபாத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை: தங்கத்தை பொறுத்தவரையில் 10 கிராம் விலை ஆனது 97,130 ஆகவும், MCX தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,05,880 ஆகவும், MCX வெள்ளி 999 விலை கிலோவிற்கு ரூ.1,05,525 ஆகவும் உள்ளது.

அதேபோல், பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளியை பொறுத்தவரையில், தங்கம் ஆனது 10 கிராமுக்கு ரூ.97,050 ஆகவும், MCX தங்க விலை 10 கிராமுக்கு ரூ.97,051 ஆகவும் உள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,05,800 ஆகவும், MCX வெள்ளி 999 விலை: கிலோ ரூ.1,05,525 ஆகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+