தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு குறைந்து காணப்படுகின்றது. எனினும் கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கம் விலையும் சரிவில் காணப்பட்ட நிலையில் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இது தொடர்ந்து டாலரின் மதிப்பு வலுவாக காணப்படும் நிலையில், தங்கம் விலையானது 2 வார சரிவில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே மேலாக தொடங்கியுள்ள நிலையில், 10 கிராமுக்கு 55,360 ரூபாய் என்ற உச்ச விலையையும் எட்டியுள்ளது.
எப்படியிருப்பினும் தங்கத்தின் ஆல் டைம் உச்ச விலையில் இருந்து 3500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இது சமீபத்தில் 10 கிராமுக்கு 58,847 ரூபாயினை எட்டியது.
முக்கிய லெவல்
கமாடிட்டி நிபுணர்களை பொறுத்தவரையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையாக அவுன்ஸூக்கு 1810 டாலர்களை எட்டியது. இதே ஏற்றம் காணும்பட்சத்தில் முக்கிய லெவல் ஆக 1860 டாலர்களையும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 55,700 ரூபாயினை முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக கணித்துள்ளனர். இதே முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 54,700 ரூபாயினையும் கணித்துள்ளனர்.
பண்ணை அல்லாத வேலை தரவு
இதே அமெரிக்காவின் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக அதுவரையில் தங்கத்தில் ஒரு ரேஞ்ச் பவுண்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 61,000 ரூபாயில் இருந்து 64,000 ரூபாய்க்குள் இருக்கலாம். இதே வெள்ளியின் விலையும் 19.50 - 21 டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
இதே வெள்ளி விலையானது இன்று கீழாக தொடங்கியுள்ளது. இதில் கிலோவுக்கு 61,560 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையினை எட்டியது. இதே ஸ்பாட் சந்தையில் 0.64% குறைந்து, 19.938 டாலர்கள் என்ற லெவலை எட்டியது.
மேற்கொண்டு அமெரிக்க பத்திர சந்தை ஏற்றமும் சற்றே மென்மையடையத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1832.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.92% குறைந்து, 19.990 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறைந்து பின்னர், அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 8 ரூபாய் குறைந்து, 55,293 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 494 ரூபாய் குறைந்து, 61,490 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 5190 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 41,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து, 5662 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 370 ரூபாய் அதிகரித்து, 56,620 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 10 பைசா குறைந்து, 67.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 67,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications