தங்கம் விலை சரிவா.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது இனியும் தொடருமா? அல்லது மீண்டும் தங்கம் விலையானது குறையுமா? இது வரவிருக்கும் நாட்களில் எப்படியிருக்கும்?

அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர சந்தை மதிப்பு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் விலையானது இன்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

எனினும் இன்று வெளியாகவிருக்கும் வேலை குறித்தான தரவானது எப்படியிருக்குமோ என்று முதலீட்டாளார்கள் கண்கானித்து வருகின்றனர். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பண்னை அல்லாத வேலை குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த தரவின் முடிவுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள், முதலீடுகளை பெரியளவில் செய்யாமல் இருப்பதும் பெரியளவில் மாற்றமின்மைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

ஓபெக் நாடுகளின் முடிவால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உற்பத்தி குறைப்பினை எண்ணெய் உற்பத்தி நாடுகள் செய்ய உள்ள நிலையில், இது கச்சா எண்ணெய் விலையை மேற்கொண்டு ஊக்குவிக்கலாம்.இது மீண்டும் பணவீக்கத்தினை தூண்டலாம். இது மீண்டும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

 எண்ணெய் விலை

எண்ணெய் விலை

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பலவற்றின் காரணமாக, எரிபொருள் தேவையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தான் இது ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளன. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் குறையாமல் தடுக்க வழிவகுக்கலாம். கூடாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது பணவீக்கத்தினை அதிகரிக்கலாம். இதுவும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.

 காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1719.50 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலை இன்று சற்று தடுமாறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது கிட்டதட்ட 1% அதிகரித்து, 20.837 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 52,076 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 455 ரூபாய் அதிகரித்து, 61,810 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4835 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 38,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5275 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40 ரூபாய் குறைந்து, 42,200 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 52,750 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 0.50 பைசா குறைந்து, 66.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 665 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 66,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.48,350

மும்பை - ரூ.47,850

டெல்லி - ரூ.48,000

பெங்களூர் - ரூ.47,900

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,350

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+