கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. இன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தங்கம் விலை இன்று ரூ.1,60,651-ல் தொடங்கி ரூ.1,59,826 வரை குறைந்து, இதன் மூலம் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் ரூ.1,800-க்கும் மேல் சரிவை சந்தித்தது.
வெள்ளிக்கிழமை MCX வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.1,61,634 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் COMEX தங்கம் விலை 5,021.59 டாலர் வரை சரிந்து 2 சதவீத இழப்பை பதிவு செய்தது. பொதுவாக போர் சூழ்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர வேண்டும், ரஷ்யா - உக்ரைன் போரில் கூட இது நடந்தது. ஆனால் ஈரான் போரில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏன்..?

தங்கம் ரீடைல் சந்தை விலை
சென்னையில் இன்று தங்கம் விலை சரிவடைந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,309 ஆக இருந்து ரூ.109 குறைந்துள்ளது. அதேபோல் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 100 ரூபாய் குறைந்து ரூ.14,950 ஆக இருக்கிறது. மேலும் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,000 ஆக இருந்து ரூ.70 குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் தங்கம் விலை 5.23 சதவீதம் ரீடைல் சந்தையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரத்தைப் பார்க்கும்போது தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி உயர்ந்த நிலையில் இருந்த தங்கம், அதன் பின்னர் பல நாட்களாக படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தை நகர்வுகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
ஏன் ஈரான் போரில் தங்கம் - வெள்ளி குறைகிறது..?
ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது பணவீக்கத்தை மீண்டும் தூண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பை தாமதப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு இடத்தை தேடும் பட்சத்தில் பத்திர சந்தை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இது தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு எதிர்மறையாக செயல்படுகிறது.
இதேவேளையில் டாலர் மதிப்பும் வலுவடைந்து வருகிறது, உலகில் பெரும்பாலான கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர் நாணயத்தில் தான நடக்கிறது. இதேபோல் டாலர் மதிப்பு வலுவடையும் போது தங்கம் விலை குறையும். இதுவும் தங்கத்தின் மீதான பாதுகாப்பு தேவையை குறைக்கிறது.
இப்படி பத்திர சந்தை, டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் சந்தை ஆகிய மூன்றும் தங்கம் - வெள்ளி மீதான முதலீட்டை வெறியேற்றி விலை குறைய முக்கிய காரணமாக உள்ளது. உதாரணமாக இன்று ஒரு நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த ஒரு வாரத்தில் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இதன் மூலம் கடந்த 8-10 வர்த்தக நாளில் கச்சா எண்ணெய் மீதான முதலீடு 60 -70 சதவீதம் வரையிலான லாபத்தை கொடுத்துள்ளது.
நிபுணர் கருத்து
கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இது தங்கம் விலை உயர்வுக்கு எதிராக செயல்படுகிறது. டாலர் வலுவடையும் போது தங்கம் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்கின்றனர்.
சஜந்தா சச்தேவா, SS WealthStreet நிறுவனர், "எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அச்சம் எழுந்துள்ளது. இது ஃபெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பை தாமதப்படுத்தும். டாலர் வலுவடைந்துள்ளது. இது தங்கத்துக்கு எதிர்மறையாக உள்ளது" என்று கூறினார்.
தற்காலிக இடைவெளி
தங்கம் கடந்த 2025-ல் 70 சதவீதம் உயர்ந்தது. 2026-ல் 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. ஜனவரி இறுதியில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 5,600 டாலர் என்ற உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை நிலையாக உள்ளது. இது ஒரு தற்காலிக இடைவெளி (consolidation phase) என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தை இப்போது நிலையாக இருந்தாலும் நீண்டகாலத்தில் தங்கம் வலுவான முதலீடாக இருக்கும்.
மொத்தத்தில், எண்ணெய் விலை உயர்வு பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது டாலர் வலுவடைவுக்கு வழிவகுத்தது. இதனால் தங்கம் விலை சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications