தங்கம் விலை ஓரே மாதத்தில் 3000 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கம் வாங்குவது சரியா..?!

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலியாக இந்த வாரம் தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை MCX வர்த்தகச் சந்தை முடிவில் 0.37 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஏப்ரல் மாத வர்த்தகத் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 44000 ரூபாய் அளவீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களில் தங்கம் விலை சுமார் 3,000 ரூபாய் அதிகரித்துத் தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ள சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதேவேளையில் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை ஏப்ரல் மாதம் 0.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,778.04 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..? தங்கம் விலை தொடர்ந்து உயருமா அல்லது தற்போது இருக்கும் அளவீட்டை விடவும் குறையுமா..? தங்கம் வாங்க திட்டமிடும் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் என்ன செய்ய வேண்டும்..? எல்லாவற்றுக்குமான பதில்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 அமெரிக்கப் பத்திர சந்தை

அமெரிக்கப் பத்திர சந்தை

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள் மூலம் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான முதலீடுகள் வெளியேறி அமெரிக்கச் சந்தையில் குவிந்தது. இதன் வாயிலாக நாணய மதிப்பில் அதிகளவிலான சரிவு ஏற்பட்டு அமெரிக்க டாலர் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் தங்கம் விலையும் சரிந்தது மறந்துவிடக்கூடாது.

 லாபம் குறைந்தது

லாபம் குறைந்தது

இந்நிலையில் தற்போது அமெரிக்கப் பத்திர முதலீட்டுச் சந்தையில் 10 வருட பத்திரங்களில் கிடைக்கும் வருமானத்தின் மதிப்பு 1.6 சதவீத அளவிற்குக் குறைந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலரின் மதிப்புக் கணிசமாகக் குறையத் துவங்கியுள்ளது. பத்திர சந்தையில் கிடைக்கும் லாபம் குறைந்துள்ள நிலையில் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 சீனாவின் முக்கிய அறிவிப்பு

சீனாவின் முக்கிய அறிவிப்பு

இதேவேளையில் இந்தியாவிற்கு அடுத்தாகத் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடான சீனாவில் மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 18.3 சதவீதம் அடைந்து உலக நாடுகளை அதிர்ச்சி அளித்துள்ள நிலையில் சீன அரசு தங்கம் மீதான முதலீடு மற்றும் கொள்முதல் அளவீட்டில் தளர்வு அளித்துள்ளது.

 அதிகத் தங்கம் வாங்கச் சீனா அனுமதி

அதிகத் தங்கம் வாங்கச் சீனா அனுமதி

சமீபத்தில் சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சீனாவில் வர்த்தகம் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் அதிகளவிலான தங்கத்தை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. சீனா அரசு தனது நிதிநிலையை மேம்படுத்த இத்தகைய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த முடிவால் தங்கம் முதலீட்டுச் சந்தையில் அதிகளவிலான முதலீடும், டிமாண்டும் கூடியுள்ளது.

 இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

அமெரிக்கா, சீனாவில் நிலைமை இப்படியிருக்கு இந்தியச் சந்தையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் வர்த்தகம், பங்குச்சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

 3000 ரூபாய் உயர்வு

3000 ரூபாய் உயர்வு

இதன் வாயிலாகவே இந்தியாவில் தங்கம் விலை கடந்த 15 நாட்களில் 3000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நிலை பெறும் வரையில் ரூபாய் மதிப்பின் சரிவு தொடரும், தங்கம் விலை உயர்வும் தொடரும்.

 தங்கம் மீது முதலீடு

தங்கம் மீது முதலீடு

தங்கம் குறைவாக இருக்கும்போது வாங்குவதே சிறந்தது, அது சேமிப்புக்காக வாங்கினாலும் சரி, நீண்ட கால அல்லது குறுகிய கால முதலீட்டுக்கு வாங்கினாலும் சரி. தற்போது இந்தியாவில் வர்த்தகச் சூழ்நிலை கொரோனா தாக்கத்தின் காரணமாக மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் தங்கம் விலை தற்போது நிலையற்ற தன்மையில் உள்ளது.

 இது தான் சிறந்தது

இது தான் சிறந்தது

எனவே தங்க நகை அல்லது தங்கம் வாங்குவோர் இந்த விலை தடுமாற்றம் நிலைபெற்ற பின்பு வாங்குவது சிறந்தது. இதேவேளையில் குறுகிய கால முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை முதலீட்டை சரிவில் இருந்து காப்பாற்றத் திட்டமிடுவோர் சந்தை நிலையை உணர்ந்து முதலீடு செய்வது உத்தமம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+