கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை விண்ணை எட்டி வருகிறது. என்னதான் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும்.. அதை விரும்பி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. இதுபோன்ற சூழ்நிலை நிலவி வருவதால் தங்கத்தை வாங்கும் போது அவை போலியானதா? அல்லது தூய தங்கத்தினால் செய்யப்பட்டதா? என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இன்றெல்லாம் சந்தைகளில் தங்கத்தை போலவே காட்சியளிக்கும் கவரிங் நகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன.
வளர்ந்து வரும் தங்க வியாபாரத்தின் மத்தியில் அதை வைத்து தயாரிக்கப்படும் நகைகளும் போலியாக மாறும் சூழல் உள்ளது. எனவே அதிகரித்து வரும் இந்த மோசடியை தடுப்பதற்கும், பயமின்றி நகை வாங்குவதற்கும் போலியான தங்கத்தை அடையாளம் காண்பது அவசியமாகும். வீட்டிலிருந்தே போலியான நகைகளை அடையாளம் காண சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் எல்லா வழிகளையும் பயன்படுத்தி சாமானியர்களால் தங்கத்தின் தூய்மையை தெரிந்து கொள்ள முடியாது. அதற்கு சில சொல்யூஷன்கள் தேவைப்படும். எனவே வீட்டிலேயே தங்கத்தின் தூய்மையை கண்டுபிடிக்கும் சில மெத்தடுகளை பார்ப்போம்.
மெத்தட் 1: எந்த ஒரு நகை வாங்கினாலும் சரி அதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியம். நீங்கள் வாங்கிய நகையில் ஹால்மார்க் முத்திரை இருந்தால் நீங்கள் சரியான நகையை வாங்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஹால்மார்க்கிங் முத்திரையைப் பொறுத்தவரையில் தங்கத்தின் தன்மை முக்கியம். அதாவது 10 கேரட், 14 கேரட், 18 கேரட், 22 கேரட். 24 கேரட் என தங்கத்தின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ப நீங்கள் வாங்கிய தங்கம் எத்தனை கேரட்டை வைத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம், BIS அங்கீகாரம், வணிகரின் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் ஹால்மார்கிங்.
மெத்தட் 2: வினிகரைப் பயன்படுத்தி தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். தங்கத்தின் மீது சில துளிகள் வினிகரை ஊற்றினால் சில நிமிடங்களுக்கு பிறகு அவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் அது தூய தங்கம். அதுவே போலி தங்கமாக இருந்தால் அது வினிகருடன் ரியாக்ட் ஆகி கருப்பு நிறமாக மாறிவிடும்.
மெத்தட் 3: காந்தத்தை பயன்படுத்தி தங்கத்தின் தூய்மையை எளிதில் சரி பார்க்க முடியும். தங்க நகைகளில் ஒரு காந்தத்தை வையுங்கள். நகைகள் காந்தத்தில் ஒட்டவில்லை என்றால் தங்கம் உண்மையானது என்று பொருள். அதுவே தங்கம் காந்தத்தில் ஒட்டிக்கொண்டால் அவை போலியாக இருக்கலாம்.
மெத்தட் 4: ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் நீங்கள் வாங்கிய தங்கத்தை வைத்து விடுங்கள். தங்கம் தண்ணீரில் மிதந்தால் அது போலியானது. தங்கம் எவ்வளவு லேசானதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தண்ணீரில் மூழ்கிவிடும். ஏனெனில் அதிக அடர்த்தி கொண்ட உலோகம் தங்கம்.
ஒருவேளை இந்த சோதனைகளில் எல்லாம் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள நகை கடைகளுக்கு செல்லலாம். அவர்கள் உங்களுக்கு நகைகளின் தூய்மையை அடையாளம் காண உதவுவார்கள்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications