ஜெய்ப்பூர்: இந்தியாவில் தங்கம் பிடிக்காத மக்கள் யாரேனும் இருப்பார்களா..? அப்படி இருந்தாலும் முதலீடு செய்வதற்காக கட்டாயம் தங்கத்தை முக்கிய ஆதாரமாக வைத்திருப்பார்கள். உலகிலேயே அதிகளவில் தங்கத்தை நுகர்வு கொண்ட நாடாக இந்தியா 2வது இடத்தில் இருக்கும் வேளையில், இந்தியாவில் தங்கத்திற்கான ஆதாரமில்லை.
ஒவ்வொரு மாதமும் பல டன் தங்கம் வெளிநாட்டில் இருந்து டாலர் மதிப்பில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு வரியை உயர்த்துவது முதல் தங்க பத்திரம் வரையில் பல முயற்சிகளை செய்து வருகிறது.

தோண்ட தோண்ட தங்கம்: ஆனாலும் இறக்குமதி அளவுகள் குறையவில்லை, இப்படியிருக்கையில் இந்தியாவிலேயே தங்கம் கிடைத்தால் எப்படியிருக்கும்..?!! இதுதான் இப்போது நடந்திருக்கும். சமீப காலமாக இந்தியாவில் பல பகுதிகளில் தங்கம், லித்தியம் தாது இருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கச் சுரங்கத்திற்கான ஏலம் விண்ணப்பம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
முதல் மின்-ஏலம்: ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள புகியா-ஜகபூர் மற்றும் கங்கரியா-காரா பகுதிகளில் அமைந்துள்ள அம்மாநிலத்தின் தங்கச் சுரங்கங்களுக்கான முதல் மின்-ஏலம் (e-auction) நடத்தும் பணிகளை ராஜஸ்தான் மாநில சுரங்கத் துறை தொடங்கியுள்ளது.
டெண்டர் ஆவணங்கள்: மத்திய அரசின் MSTC இணையதளத்தில் டெண்டர் ஆவணங்கள் உள்ளது என்று ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை தங்கச் சுரங்க ஏலம் நடத்தப்பட்டதில்லை. இதுவே முதல் முறையாக நடைபெற உள்ளது என்பதால் இந்திய மக்களின் கவனத்தை இந்த ஏலம் பெற்றுள்ளது.
ராக்கெட் வேகம்: தங்கச் சுரங்க ஏலத்திற்கான அனைத்து பணிகளையும் ராஜஸ்தான் மாநில அரசு வெறும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் சுரங்கத் துறை முடித்துவிட்டது என்றும், MSTC இணையதளம் மற்றும் சுரங்கத் துறை இணையதளத்தில் மின்-ஏலத் திட்டம் குறித்தும் முழு விபரத்தை வெளியிட்டுள்ளது என்றும் சுரங்கத் துறை செயலாளர் ஆனந்தி தெரிவித்தார்.
இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பு: பன்ஸ்வாரா என்னும் இடத்தில் புகியா-ஜகபூர் பகுதியில் பெரிய அளவிலான தங்கம் தாது இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் செம்பு தேடி புவியியல் ஆய்வு செய்த இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு, ஆய்வு செய்தபோது முதன்முதலில் இங்கு தங்கத்தின் அறிகுறிகள் காணப்பட்டன.
222.39 டன் தங்கம்: இதில் ஷாக்கான இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு உடனே, விரிவான ஆய்வுகளுக்கு உத்தரவிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. சுமார் 940.26 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் 113.52 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பதாகவும், அதில் 222.39 டன் தங்கம் இருப்பதாகவும் முதற்கட்ட மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டது.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்: இந்த 940.26 ஹெக்டர் பகுதியில் தங்கத் தாதுவை வெட்டியெடுக்கும் போது, இப்பகுதியில் கிடைக்கும் துணை கனிமங்களும் வெட்டியெடுக்கப்படும் என்று சுரங்கத் துறை ஆனந்தி கூறினார். இதன் மூலம் ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கணக்காக உள்ளது.
கடைசி நாள், ஏல நாள்: மின்-ஏலம் அதாவது E-Auction திட்டத்தின்படி, விருப்பமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை மார்ச் 21 வரை வாங்க முடியும். ஏல தொகை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆகும். அதைத் தொடர்ந்து, புகியா-ஜகபூர் (Bhukia-Jagpura) தங்கச் சுரங்கங்களுக்கான சுரங்க உரிமத்திற்கான ஏலம் மே 2 ஆம் தேதியும், கங்கரியா-காரா-வுக்கான (Kankaria-Gara) கலப்பு உரிமத்திற்கான (composite licence) ஏலம் மே 3 ஆம் தேதியும் நடைபெறும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications