தங்கம் விலை உயர உயர இதன் விற்பனை குறையும் என எதிர்பார்த்தால் மக்கள் தொடர்ந்து அதிகளவில் வாங்கி வருகின்றனர். சொல்லப்போனால் பல மற்ற முதலீடுகளை குறைத்துவிட்டு தங்கம், வெள்ளி மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர், இதற்கு முக்கிய காரணம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் தங்கம் விலை 76 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தங்கம் மீதான முதலீட்டில் பெரும் லாபத்தை கொடுத்துள்ளத.
இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியாவில் மக்களை தங்கள் முதலீட்டை பாதுக்காக வைக்க காலம் காலமாக தங்கத்தை பயன்படுத்தி வரும் காரணத்தால் அமெரிக்க கஜானாவில் இருக்கும் தங்கத்திற்கு இணையாக தென்னிந்தியாவில் மக்கள் தங்கள் வீட்டில் தங்கத்தை வைத்துள்ளனர்.

இப்படிப்பட்ட தங்கத்தை விலை உயர்வின் காரணமாக மக்கள் விற்பனை செய்ய துவங்கியிருக்கும் வேளையில் மத்திய அரசு கவனித்துள்ள காரணத்தால் முக்கியமான அறிவிப்பை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது.
ஏற்கனவே மக்கள் அதிகமாக தங்கம் அதிகம் வாங்குவதை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில், தற்போது தங்கத்தை விற்பனை செய்வதிலும் மாற்றம் செய்ய திட்டமிட்டு வருகிறது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டீம்.
மக்கள் முன்பு தங்கத்தை நகை, காயின், பார் என உலோகமாக மட்டுமே வாங்கி வந்த நிலையில், இப்போது டிஜிட்டல் முறையில் சவரின் கோல்ட் பாண்ட்ஸ் (SGBs), எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட்ஸ் (ETFs), தங்க மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி வருகின்றனர். தங்கம் ஒரு மூலதன சொத்தாக கருதப்படுவதால் இதன் மீதான வரியில் முக்கிய மாற்றம் கொண்டு வரவும், இதை பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
தற்போது தங்கம், வெள்ளி விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் பலர் இதனை விற்க முன்வரலாம். இந்தியாவில் தங்க விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படுகிறது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வரி விதிப்பு தங்கத்தின் வடிவம் மற்றும் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
பட்ஜெட் 2026ல் வரும் முக்கிய மாற்றம்
தங்கத்தின் ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஒவ்வொரு ஹோல்டிங் காலம் (அதாவது முதலீடு செய்த காலம்) இருப்பதால் வரி விதிப்பு சிக்கலாக உள்ளது. டிஜிட்டல் தங்கத்திற்கு குறைந்த காலம் போதுமானது, ஆனால் உலோக வடிவிலான தங்கத்திற்கு அதிகம் தேவை என நிலை இருக்கும் காரணத்தால். இதை எளிமையாக்கும் பொருட்டு அனைத்து வடிவங்களுக்கும் ஒரே ஹோல்டிங் காலத்தை அறிவிக்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிலவற்றின் மீதான வரி உயரலாம் என கணிக்கப்படுகிறது.
தங்க விலை உயர்ந்துள்ள நிலையில் விற்பனையை ஊக்குவிக்க GST விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நகை கடைகள், தங்க நகை அமைப்புகள், தங்க நகை ஏற்றுமதி அமைப்புகள் என ஒட்டுமொத்த தொழில்துறையும் கோரிக்கை வைத்து வருகிறது.
தற்போது தங்க இறக்குமதி வரி 6% உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று தொழில்துறை வலியுறுத்துகிறது. இந்த குறைப்பு மூலம் தங்கத்தின் விற்பனை விலை குறையும். அதேபோல் தங்க கடத்தல் குறையும்.
இதேபோல் மக்கள் தங்கத்தை உலோகமாக வாங்குவதை காட்டிலும் டிஜிட்டல் முறையில் வாங்குவது லாபமாக கருதும் வகையில், அரசு டிஜிட்டல் தங்க ETFs மற்றும் SGBs-க்கு அதிக சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் வரி வசூலை எளிதாக்க முடியும், கருப்பு பணம் தங்க முதலீட்டு சந்தையில் வருவதை குறைக்கும்.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications