உலகளவில் பொருளாதார அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக, தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து தடாலடியாக உயர்ந்து, ஏப்ரல் 22 ஆம் தேதி காலை வர்த்தகத்தில் ஏற்கனவே எட்டிய வரலாற்று உச்சத்தை உடைத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் 3,490 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 2750 ரூபாய் உயர்ந்து 92,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 3000 ரூபாய் உயர்ந்து 1,01,350 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டியுள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 2200 ரூபாய் உயர்ந்து 74,320 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 1,11,000 ரூபாயாக உள்ளது. எப்போதும் இல்லாமல் பிளாட்டினம் விலை 10 கிராம் 100 ரூபாய் உயர்ந்து 26,600 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 74320 ரூபாய், மும்பை - 74320 ரூபாய், டெல்லி - 74440 ரூபாய், கொல்கத்தா - 74320 ரூபாய், பெங்களூர் - 74320 ரூபாய், ஹைதராபாத் - 74320 ரூபாய், கேரளா - 74320 ரூபாய், புனே - 74320 ரூபாய், பரோடா - 74360 ரூபாய், அகமதாபாத் - 74360 ரூபாய், ஜெய்ப்பூர் - 74440 ரூபாய், லக்னோ - 74440 ரூபாய், கோயம்புத்தூர் - 74320 ரூபாய், மதுரை - 74320 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,290 ரூபாய், மும்பை - 9,290 ரூபாய், டெல்லி - 9,305 ரூபாய், கொல்கத்தா - 9,290 ரூபாய், பெங்களூர் - 9,290 ரூபாய், ஹைதராபாத் - 9,290 ரூபாய், கேரளா - 9,290 ரூபாய், புனே - 9,290 ரூபாய், பரோடா - 9,295 ரூபாய், அகமதாபாத் - 9,295 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,305 ரூபாய், லக்னோ - 9,305 ரூபாய், கோயம்புத்தூர் - 9,290 ரூபாய், மதுரை - 9,290 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 10,135 ரூபாய், மும்பை - 10,135 ரூபாய், டெல்லி - 10,150 ரூபாய், கொல்கத்தா - 10,135 ரூபாய், பெங்களூர் - 10,135 ரூபாய், ஹைதராபாத் - 10,135 ரூபாய், கேரளா - 10,135 ரூபாய், புனே - 10,135 ரூபாய், பரோடா - 10,140 ரூபாய், அகமதாபாத் - 10,140 ரூபாய், ஜெய்ப்பூர் - 10,150 ரூபாய், லக்னோ - 10,150 ரூபாய், கோயம்புத்தூர் - 10,135 ரூபாய், மதுரை - 10,135 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,690 ரூபாய், மும்பை - 7,601 ரூபாய், டெல்லி - 7,614 ரூபாய், கொல்கத்தா - 7,601 ரூபாய், பெங்களூர் - 7,601 ரூபாய், ஹைதராபாத் - 7,601 ரூபாய், கேரளா - 7,601 ரூபாய், புனே - 7,601 ரூபாய், பரோடா - 7,605 ரூபாய், அகமதாபாத் - 7,605 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,614 ரூபாய், லக்னோ - 7,614 ரூபாய், கோயம்புத்தூர் - 7,690 ரூபாய், மதுரை - 7,690 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,600 ரூபாய், மும்பை - 26,600 ரூபாய், டெல்லி - 26,600 ரூபாய், கொல்கத்தா - 26,600 ரூபாய், பெங்களூர் - 26,600 ரூபாய், ஹைதராபாத் - 26,600 ரூபாய், கேரளா - 26,600 ரூபாய், புனே - 26,600 ரூபாய், வதோதரா - 26,600 ரூபாய், அகமதாபாத் - 26,600 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.30 - 8,876 ரூபாய்
குவைத் - KWD 31.23 - 8,693 ரூபாய்
மலேசியா - MYR 475 - 9,240 ரூபாய்
ஓமன் - OMR 41.20 - 9,111 ரூபாய்
கத்தார் - QAR 382.50 - 8,933 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 388 - 8,805 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 141.10 - 9,204 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 388.75 - 9,010 ரூபாய்
அமெரிக்கா - USD 103 - 8,770 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
துபாய் (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
புஜைரா (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 388.75 - 9,010 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 382.50 - 8,933 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 41.20 - 9,111 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 388 - 8,805 ரூபாய்
இங்கிலாந்து - GBP 76.53 - 8,732 ரூபாய்
கனடா - CAD 146.50 - 9,034 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 166.30 - 9,105 ரூபாய்
நேபாளம் - NPR 15,065.42 - 9,393 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 42.10 - 9,508 ரூபாய்
குவைத் - KWD 34.06 - 9,481 ரூபாய்
மலேசியா - MYR 495 - 9,629 ரூபாய்
ஓமன் - OMR 44.05 - 9,741 ரூபாய்
கத்தார் - QAR 411 - 9,599 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 420 - 9,531 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 155 - 10,110 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 420 - 9,734 ரூபாய்
அமெரிக்கா - USD 110 - 9,366 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
துபாய் (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
புஜைரா (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 420 - 9,734 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 411 - 9,599 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 44.05 - 9,741 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 420 - 9,531 ரூபாய்
இங்கிலாந்து - GBP 83.49 - 9,526 ரூபாய்
கனடா - CAD 154.75 - 9,542 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 181.40 - 9,931 ரூபாய்
நேபாளம் - NPR 16,375.45 - 10,210 ரூபாய்
இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) மீது டிரம்ப் அரசு கொடுக்கும் அழுத்தங்களும், அதன் செயல்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிராக எழுந்துள்ள கேள்விகள் தான். அமெரிக்க அரசின் சில அறிவிப்புகள், ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரம் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் தன்மையைப் பாதிக்கலாம் என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளன.
இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து உலகளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது. இதன் விளைவாக, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டுச் சொத்துகளை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்து வருவதன் விளைவாகத் தங்கம் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்க அழுத்தங்கள், மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை தங்கத்தின் விலையை உயர்த்து முக்கிய காரணிகளாகும். தற்போது, ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரம் குறித்து எழுந்துள்ள கேள்விகள், அமெரிக்கப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கத்தின் விலை உயர்வு தங்க நகை வாங்குவோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், தங்க நகைகள் வாங்குவது என்பது நம்முடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளையில் இன்றைய தடாலடி விலை உயர்வு, திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பலருக்கு பெரும் சவாலாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications