சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் விலை குறைந்துள்ளது. மூன்று நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தி தந்துள்ளது.
ஜூலை 4ஆம் தேதியான இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 9,933 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய் குறைந்து 9,873 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 79,464 ரூபாயாக இருந்த தங்கம் விலை இன்று 78 ,984 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

பெரும்பாலும் நாம் வாங்கக்கூடிய தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்டவை. எனவே மக்கள் 22 கேரட் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை தான் கவனிக்க வேண்டும். அந்த வகையில் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் நேற்று 9,105 பாய்க்கு விற்கப்பட்டது இன்று அது 55 ரூபாய் விலை குறைந்து 9,050 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 72,840 ரூபாயாக இருந்து இன்று 440 ரூபாய் சரிவடைந்து 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்ததாக 18 கேரட் தங்கமும் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 45 ரூபாய் விலை குறைந்து இன்று 7,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் தங்கம் 360 ரூபாய் விலை சரிவடைந்து 59,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஜூன் 30ஆம் தேதியான திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 4ஆம் தேதியான வெள்ளிக்கிழமை வரை பார்த்தால் தங்கம் ஏற்றம் இறக்கத்துடனே இருந்துள்ளது.
திங்கள்கிழமை 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஏறுமுகத்துடன் இருந்து இன்று விலை குறைந்துது 9,050 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று நாட்களில் 190 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை இன்று 55 ரூபாய் குறைந்துள்ளது.ஒரு சவரன் என பார்க்கும் போது திங்கள்கிழமை 71,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அடுத்த மூன்று நாட்களில் சவரனுக்கு 1,520 ரூபாய் விலை உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்துள்ளது.
மூன்று நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதற்கு வியட்நாம் அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை குறைந்து 1,20,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications