சென்னை: கடந்த ஒரு வார காலமாகவே தங்கம், விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. குறிப்பாக ஒரு சவரன் ஆபரண தங்கம் 97,000 ரூபாயை கடந்து விற்பனையானது .
சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றம் அடைந்து வரக்கூடிய சூழலில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை கடந்து விடுமோ என மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சூழலில் தான் அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளான நேற்ற்உ சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு கண்டது. இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. நேற்று ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் 11,350 க்கு விற்பனை செய்யப்பட்டது . இன்றைய தினம் 100 ரூபாய் விலை குறைந்து 11,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது தங்கத்தின் விலை 800 ரூபாய் விலை குறைந்திருக்கிறது . நேற்று 90, 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று 90,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து வருவது மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று மாற்றமடைந்திருக்கிறது . ஒரு கிராம் 109 ரூபாய் விலை குறைந்து 12,273 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 872 ரூபாய் விலை குறைந்து 98,184 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 18 கேரட் தங்கமும் விலை குறைந்துள்ளது. சென்னையில் 18 கேரட் தங்கம் கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9,390 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 680 ரூபாய் விலை சரிந்து 75 ,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று குறைந்திருக்கிறது. கிராமுக்கு மூன்று ரூபாய் சரிவடைந்து இருக்கிறது . நேற்று 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 165 விற்கப்படுகிறது . ஒரு கிலோ வெள்ளி 3,000 ரூபாய் விலை குறைந்து 1,65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் , வெள்ளி விலை குறைந்து வருவது சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும் வரும் நாட்களில் உலக அரசியலில் நிகழும் மாற்றங்கள் தான் தங்கம் விலையை நிர்ணயம் செய்யும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications