சென்னை: தங்கம் வாங்குபவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருக்கிறது . ஜூன் மாதத்தின் கடைசி நாளான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாயும் சவரனுக்கு 120 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது.
தங்கம் விலை: இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து பல்வேறு வரலாறு காணாத உச்சங்களை எட்டியது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் மற்றும் ஆயுத மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தன. தற்போது இந்த பதற்றங்கள் அனைத்தும் தனிந்திருப்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது .

இன்று விலை என்ன: இதன்படி ஜூன் 30ஆம் தேதியான இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று 9,742 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 16 ரூபாய் குறைந்து 9,726 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 128 ரூபாய் விலை குறைந்து 77 ,808 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
22 கேரட் தங்கம் :பெரும்பாலும் நாம் வாங்கக்கூடிய தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்டவை. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் தங்கமும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் நேற்று 8, 930 பாய்க்கு விற்கப்பட்டது இன்று அது 15 ரூபாய் விலை குறைந்து 8, 915 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 71,440 ஆக இருந்து இன்று 120 ரூபாய் சரிவடைந்து 71 ,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2,520 ரூபாய் வரை விலை குறைந்தது: அடுத்ததாக 18 கேரட் தங்கமும் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 10 ரூபாய் விலை குறைந்து இன்று 7,350 விற்கப்படுகிறது ஒரு சவரன் தங்கம் 80 ரூபாய் விலை சரிவடைந்து 58 , 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக தங்கத்தின் விலை சரிவடைந்த வண்ணமே இருக்கிறது. ஜூன் 23ஆம் தேதி அன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அது தற்போது 315 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு 315 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு என பார்க்கும்போது 2,520 ரூபாய் வரை விலை சரிவடைந்து இருக்கிறது .
வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 117.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தங்க நகை வாங்க வேண்டிய அவசியத்தில் இருக்கும் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications