சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு 440 விலை குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான 6 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் வரை விலை குறைந்து இருக்கிறது, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் வரை சரிந்திருக்கிறது.
குறையும் தங்கம் விலை: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தணிந்ததை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்த வண்ணம் இருக்கிறது. ஜூன் 28ஆம் தேதியான இன்று சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து இருக்கிறது நேற்று 9,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 9,742 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு சவரன் விலை நேற்றைய தினம் 78,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 480 ரூபாய் விலை குறைந்து 77 , 936 ரூபாய்க்கு விற்பனையாகிறது .

இன்றைய விலை என்ன?: 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 8,985 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 8,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று 71 ,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது ,இன்றைய தினம் அது 440 ரூபாய் விலை குறைந்து 71,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் 18 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிவடைந்து 7,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது , ஒரு சவரன் 360 ரூபாய் விலை குறைந்து 58,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
6 நாட்களில் எவ்வளவு குறைந்தது?: தங்கத்தின் விலை பொருத்தவரை கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடர்ந்து சரிவடைந்து தான் வருகிறது. ஜூன் 23ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, அதுவே இன்று 8930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆறு நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது.
வெள்ளி விலையும் குறைந்தது: கடந்த திங்கட்கிழமை அன்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 73 , 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, அது தற்போது விலை சரிவடைந்து 71,440-க்கு விற்கப்படுகிறது .அதாவது இந்த ஆறு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரை விலை குறைந்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை சற்றே சரிவை கண்டிருக்கிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 0.10 காசுகள் குறைந்து 117.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 100 ரூபாய் குறைந்து 1,17,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications