நவம்பர் 2-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகையின் போது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து உச்ச விலையை எட்டியது. ஆனாலும் சிலர் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல், தங்க நகைகளை வாங்கினர். அதன் பிறகு இன்று தான் விலை சற்று குறைந்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாயாகவும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்க விலை 8,040 ரூபாயாக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 15 ரூபாய் குறைந்து 7,370 ரூபாயாகவும், 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 120 ரூபாய் குறைந்த 58,960 ரூபாயாகவும் உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 16 ரூபாய் குறைந்து 8,040 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 128 ரூபாய் குறைந்து 64,320 ரூபாயாக உள்ளது.

பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கக் கட்டணம் குறைந்த போது பல நகைக்கடைக்காரர்களும் நகைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டனர். இதன் காரணமாக இந்த நிதியாண்டில் தங்க நகை விற்பனையாளர்களின் வருவாய் 25 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு ஏற்ப இந்த தந்தேராஸ் பண்டிகைக்கும் நகை விற்பனை சூடு பிடித்தது.
தங்க நகையை பொறுத்தவரை அதன் விலையேற்றம் சிலருக்கு மகிழ்ச்சிகரமானதாக தோன்றும். அதே போல சிலருக்கு அதன் விலை குறைவது மகிழ்ச்சிகரமானதாக தோன்றலாம்.
தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் நபர்களுக்கு விலை உயர்வு நிம்மதி அளிக்கும். அவர்களுடைய முதலீட்டின் மதிப்பு அதிகரிப்பது தான் இதற்கு கரணம். அதே சமயம் திருமணம், விழாக்கள் போன்ற சமயங்களில் நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு விலை குறைவது மகிழ்ச்சியாக இருக்கும். குறைந்த விலையில் அதிக எடை உள்ள நகைகளை வாங்க முடியும் என்பதால் நகை விலை குறைய வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் ஏற்பட்ட விலை குறைவின் காரணமாக பல முதலீட்டாளர்களிடம் ஏற்கனவே இருக்கும் தங்கத்தின் மதிப்பு குறைந்தது குறித்தும் நாம் செய்திகளில் பார்த்தோம்.
எனவே தங்கம் விலை ஏறுவது ஒரு சிலருக்கு நன்மை பயக்கும். தங்கம் விலை இறங்குவது ஒரு சிலருக்கு நன்மை பயக்கும். இன்று தங்கம் விலை இறங்கியுள்ளது
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 106 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,06,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications