அக்டோபர் 15-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் முழுவதும் படிப்படியாக ஏறி 7800 என்ற உச்சத்தை எட்டியது . இந்த விலையில் இன்றைய தினம் குறைவு ஏற்பட்டுள்ளது.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,095 ரூபாயாகவும் அதேபோல 24 கேரட் தங்கம் விலை 7,740 ஆகவும் உள்ளது. இந்திய மக்கள் நாட்டின் பணவீக்கத்திற்கு எதிராக ஆதாரமாக முதலீடு செய்யும் ஒன்று என்றால் அது தங்கம் தான்.

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக சாமானியர்கள் மட்டுமல்லாமல் பெரிய அளவில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்களும் கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தங்கத்தின் விலையையும் இன்று வாங்கும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பதில் உங்களுக்கே கிடைத்த விடும். ஆம் அந்த அளவுக்கு தங்கம் அதிக அளவிலான ரிட்டன்ஸை வழங்கியுள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் 20 ரூபாய் குறைந்து 7,095 ரூபாயாகவும், 1 சவரன் 22 கேரட் 160 ரூபாய் குறைந்து 56,760 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 22 ரூபாய் குறைந்து 7,740 ஆக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 61,920 ரூபாயாகவும் உள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை உச்சத்தை எட்டும் என்று பல நிபுணர்களும் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பல மத்திய வங்கிகளும் தங்கத்தை தொடர்ந்து வாங்கி தனது இருப்பில் வைக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தங்க இருப்பை அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமின்றி பிற நாடுகளும் தங்கத்தை தொடர்ந்து தங்க இருப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் 2025-ஆம் ஆண்டு இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்து 103 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications