அக்டோபர் 9-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. சர சரவென ஏறி உச்சத்தை எட்டிய தங்கம் விலை, சரசரவெனக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 2 தினங்களாக தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்றைய தினம் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்தது. இந்தப் பதிவில் கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,030 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,669 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 70 ரூபாய் குறைந்து ரூ.7,030 ஆக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை 560 ரூபாய் குறைந்து ரூ.56,240 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கம் 76 ரூபாய் குறைந்து, ரூ.7,669 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 608 ரூபாய் குறைந்து ரூ.61,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் தங்கம் விலை ஏறத் தொடங்கியது. இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஏறத் தொடங்கிய 22 கேரட், இன்றைய தினம் 7,030-ஐ எட்டியுள்ளது. இன்று விலை குறைவு ஏற்பட்டிருந்தாலும் மீண்டும் தங்கம் எப்போது முன்பு போல குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தங்கம் விலை பல்வேறு காரணிகளை பொறுத்து ஏறலாம் அல்லது இறங்கலாம். அந்தந்த மாநிலங்களின் வரி, போக்குவரத்து செலவுகள், தங்கத்திற்கான தேவை ஆகியவற்றின் காரணமாகத்தான் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு விலையில் தங்கம் விற்பனையாகிறது. இன்றைய தினம் தங்கம் வாங்குவதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்ச ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications