சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அதுவும் ஈரான் போர் தொடங்கிய பின்னர் தங்கம், வெள்ளியின் விலைகள் பெருமளவில் சரிந்து வருகின்றன.ஈரான் போரால் சிலிண்டர் தட்டுப்பாடு என பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு தங்கம், வெள்ளி விலை சரிவு தான் ஒரே ஆறுதலாக இருக்கிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 14,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே ஒரு சவரன் தங்கம் நேற்று 1,17,200 ரூபாய்க்கு விற்பனையானது, இன்று 1,16,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் என விலை சரிவை சந்தித்துள்ளது. 10 கிராம் தங்கம் 800 ரூபாய் விலை குறைந்து 1,45,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்த நாளான மார்ச் 1ஆம் தேதி 15,775 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பின்னர் படிப்படியாக விலை சரிந்த வண்ணமே இருக்கிறது. மார்ச் 1ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 1205 ரூபாயும் ஒரு சவரனுக்கு 9,640 ரூபாயும் விலை சரிந்துள்ளது.
வீடுகளில் திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவதற்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது. மேலும் மேலும் விலை குறையுமா என காத்திருக்காமல் இப்போதே வாங்கி வைத்து கொள்வது நல்லது.24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 87 ரூபாய் விலை குறைந்து 15, 895 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1, 27,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.90 விலை குறைந்து 12,240 ரூபாய்க்கும் ஒரு சவரன் 97,920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று சரிவடைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 275 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மார்ச் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்படி பார்த்தால் இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 50 ரூபாயும் கிலோவுக்கு 50000 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தது ஆகிய இரண்டுமே தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர தொடங்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!



Click it and Unblock the Notifications

