அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது. மாதம் பிறந்ததுமே மகிழ்ச்சி செய்தி வழங்கும் வகையில் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் தங்கம் விலை வெகுவாக அதிகரித்து கடந்த 18 நாட்களில் 400 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது. கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் என்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,050 ரூபாய் ஆகவும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,691 ரூபாயாகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இந்தியாவின் முன்னணி நகரங்களான கோயம்பத்தூர் மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் 7,050 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் 56,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் 7,696 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் 61,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் 264 குறைந்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மட்டுமன்றி நம் நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களில் உள்ள மக்கள் தங்க நகைகள் மீது பிரியம் கொண்டவர்கள். தங்கநகைக்கு இருக்கும் பாரம்பரியம், கலாச்சார தொடர்பு மற்றும் ஆபத்து நேரத்தில் கை கொடுக்கும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கையில் சிறிது பணம் சேர்ந்தால் உடனே தங்க நகைகளை வாங்கி விடும் குடும்பங்கள் நம் நாட்டில் அதிகம். இதுபோன்ற குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஏதுவாக தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் தங்கம் அதிக வருமானத்தை வழங்கியுள்ளது. நீங்கள் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தங்க நகைகளின் விலையையும் தற்போது நீங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கான விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
முன்பு நாம் வாங்கிய தங்கத்திற்கும் இன்றைய தினம் நாம் வாங்கும் தங்கத்திற்கும் வெகுவான வித்யாசத்தை நீங்களே உணரலாம். கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் தங்க நகை வாங்கி இருந்தால்.. இன்றைய மதிப்பில் அவை லட்சங்களாக உயர்ந்திருக்கும்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் வெள்ளி 101 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் நேற்றோடு ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications