தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக இருக்கும் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியாகத் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வரி அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை ரீடைல் சந்தையில் அதிகமாகவே இருந்து வருகிறது. இதை சரி செய்ய 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து MCX சந்தையில் தங்க விலை கடும் சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் ரூ.72,838 என உயர்வுடன் தொடங்கினாலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்த பிறகு, தங்க விலையில் கடுமையான சரிவைப் பதிவு செய்தது.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.68,500 என்ற இன்றைய குறைந்தபட்ச விலையைத் தொட்டது, இது காலை வர்த்தக துவக்கத்தில் இருந்து ரூ.4,218 சரிந்துள்ளது. இந்த விலை சரிவு மதிய 3 மணியளவில் ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கத் துவங்கியதால் கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2388 டாலரில் இருந்து 2410 ரூபாய் வரையில் உயர்ந்திருந்தாலும், இறக்குமதி வரி குறைப்பின் காரணமாக தங்கம் விலையில் பெரும் சரிவு காணப்பட்டு உள்ளது. இது தங்கம் வாங்குவதற்குச் சிறந்த வாய்ப்பாக இருந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு விலை சரியும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய விலை சரிவுக்கு முழுக்க முழுக்க காரணம் இறக்குமதி வரி குறைப்பு என்பதால், இந்தியச் சந்தை முழுவதும் இந்த வரி குறைப்புக்கு இணையாக விலையை திருத்தம் செய்யும் வரையில் தங்கம் விலை குறையும், அதன் பின்பு வழக்கம் போல் சர்வதேச சந்தைக்கு இணங்கச் செயல்படும். இந்த நிலையில் நேற்றையில் விலை பெரிய மாற்றமில்லாமல் துவங்கி தங்கம் விலை பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்பு ஏற்பட்ட சரிவு மதியம் 2-3 மணி வரையில் சந்தையில் எதிரொலித்தது.
இதன் வாயிலாக தமிழ்நாடு மற்றும் சென்னை ரீடைல் சந்தையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 2750 ரூபாய் குறைந்து 65,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 2990 ரூபாய் குறைந்து 71,460 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 2200 ரூபாய் குறைந்து 52,400 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 3500 ரூபாயும், ஒரு கிராம் 3.50 ரூபாயும் குறைந்து 92,500 ரூபாயாகவும் உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 320 ரூபாய் குறைந்து 25,520 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,550 ரூபாய், மும்பை - 6,495 ரூபாய், டெல்லி - 6,510 ரூபாய், கொல்கத்தா - 6,495 ரூபாய், பெங்களூர் - 6,495 ரூபாய், ஹைதராபாத் - 6,495 ரூபாய், கேரளா - 6,495 ரூபாய், புனே - 6,495 ரூபாய், ரோடா - 6,500 ரூபாய், அகமதாபாத் - 6,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,510 ரூபாய், லக்னோ - 6,510 ரூபாய், கோயம்புத்தூர் - 6,550 ரூபாய், மதுரை - 6,550 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,146 ரூபாய், மும்பை - 7,086 ரூபாய், டெல்லி - 7,101 ரூபாய், கொல்கத்தா - 7,086 ரூபாய், பெங்களூர் - 7,086 ரூபாய், ஹைதராபாத் - 7,086 ரூபாய், கேரளா - 7,086 ரூபாய், புனே - 7,086 ரூபாய், பரோடா - 7,091 ரூபாய், அகமதாபாத் - 7,091 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,101 ரூபாய், லக்னோ - 7,101 ரூபாய், கோயம்புத்தூர் - 7,146 ரூபாய், மதுரை - 7,146 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52400 ரூபாய், மும்பை - 51960 ரூபாய், டெல்லி - 52080 ரூபாய், கொல்கத்தா - 51960 ரூபாய், பெங்களூர் - 51960 ரூபாய், ஹைதராபாத் - 51960 ரூபாய், கேரளா - 51960 ரூபாய், புனே - 51960 ரூபாய், பரோடா - 52000 ரூபாய், அகமதாபாத் - 52000 ரூபாய், ஜெய்ப்பூர் - 52080 ரூபாய், லக்னோ - 52080 ரூபாய், கோயம்புத்தூர் - 52400 ரூபாய், மதுரை - 52400 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,520 ரூபாய், மும்பை - 25,520 ரூபாய், டெல்லி - 25,520 ரூபாய், கொல்கத்தா - 25,520 ரூபாய், பெங்களூர் - 25,520 ரூபாய், ஹைதராபாத் - 25,520 ரூபாய், கேரளா - 25,520 ரூபாய், அகமதாபாத் - 25,520 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,520 ரூபாய், லக்னோ - 25,520 ரூபாய், கோயம்புத்தூர் - 25,520 ரூபாய், மதுரை - 25,520 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92,500 ரூபாய், மும்பை - 88,000 ரூபாய், டெல்லி - 88,000 ரூபாய், கொல்கத்தா - 88,000 ரூபாய், பெங்களூர் - 88,000 ரூபாய், ஹைதராபாத் - 92,500 ரூபாய், கேரளா - 92,500 ரூபாய், புனே - 88,000 ரூபாய், பரோடா - 88,000 ரூபாய், அகமதாபாத் - 88,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 88,000 ரூபாய், லக்னோ - 88,000 ரூபாய், கோயம்புத்தூர் - 92,500 ரூபாய், மதுரை - 92,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28 - 6,217 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,966 ரூபாய்
மலேசியா - MYR 356 - 6,378 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,295 ரூபாய்
கத்தார் - QAR 274 - 6,290 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 276 - 6,160 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,259 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 270 - 6,143 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,111 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
துபாய் (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
புஜைரா (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 270 - 6,143 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 274 - 6,290 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,295 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 276 - 6,160 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30 - 6,617 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,539 ரூபாய்
மலேசியா - MYR 371 - 6,646 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,632 ரூபாய்
கத்தார் - QAR 292 - 6,715 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 298 - 6,651 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 6,899 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 291 - 6,638 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,446 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
துபாய் (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
புஜைரா (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 291 - 6,638 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 292 - 6,715 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,632 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 298 - 6,651 ரூபாய்


Click it and Unblock the Notifications