அமெரிக்காவின் பரஸ்பர வரி, போர் பதற்றம் போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியது இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான ஒன்றாக மாறியது. ஆனால் தற்போது சர்வதேச சர்ச்சைக்குரிய விவகாரங்கள் சுமூகமாகி வருவதால் தங்கத்தின் விலையில் யுடர்ன் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள்
தங்கத்தின் விலை தற்போது குறைய தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை குறைவின் பின்னணியில் பல முக்கியமான நிகழ்வுகள் உள்ளன. அமெரிக்கா-சீனா இடையிலான வரி தொடர்பான ஒப்பந்தம், பணவீக்கம் குறைந்தது, சர்வதேச பணவீக்கம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் உள்பட பல்வேறு காரணங்கள் தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுத்தன.

நேற்று ஜூன் கான்ராக்ட்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,300 குறைந்தது. தற்போது தங்கத்தின் விலை அதன் அதிகபட்ச விலையிலிருந்து ரூ.7,000க்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வருவது சாமானிய மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 கிராம் ரூ.86,000
வரும் நாட்களில் தங்கத்தின் விலை ரூ.86,000 வரை குறையவாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்மாண்டின் ஆராய்ச்சி தலைவர் ரெனிஷா சைனானி கூறுகையில், அமெரிக்காவும், சீனாவும் வரிகளை கணிசமாக குறைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை அதன் குறைந்த அளவுக்கு சரிவு கண்டுள்ளது.
இந்த வாரம் தங்கத்தின் விலை ரூ.94,000க்கு குறைவாக இருந்தால், அது ரூ.92,000 ஆகக் குறையக்கூடும். அதற்கு மேல் சரிந்தால் ரூ.86,000 வரை தங்கத்தின் விலை கீழ் நோக்கி செல்லக்கூடும் என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இலக்கு விலை
எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கமாடிட்டி அண்ட் கரன்சி தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், எம்சிஎக்ஸ் ஜூன் தங்க ஃப்யூச்சர்ஸில் தங்கத்தை ரூ.92,500க்கு விற்பனை செய்ய பரிந்துரைக்கிறார். இதன் இலக்கு விலை ரூ.90,950ஆக கணித்துள்ளார். அதேசமயம் ரூ.93,650ஐ ஸ்டாப் லாஸாக கணித்துள்ளார்.
தங்க கவுன்சில்
உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்க இடிஎஃப்-ல் 115 டன் அளவுக்கு முதலீடு வந்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாதாந்திர அதிகபட்ச அளவாகும். மேலும் தொடர்ந்து 5வது மாதமாக தங்க இடிஎஃப்-ல் முதலீடு அதிகரித்துள்ளது. இதில் பெரும்பகுதி (65 டன்) சீனாவிலிருந்து வந்துள்ளது.
74 வயதிலும் கலக்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications