தங்கம் விலையில் நேற்று ஏற்பட்ட ஏற்றம் காரணமாக பலரும் கவலையில் இருந்த நிலையில் சற்று ஆறுதல் தரும் வகையாக இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 சவரன் தங்கம் கிட்டத்தட்ட 1000 ரூபாய் வரை அதிகரித்து இருந்த நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இந்தப் பதிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய வெள்ளி மற்றும் தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 1 கிலோ வெள்ளி விலை 88,000 ரூபாயாக உள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,555 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினத்தை விட இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை நேற்றைய விலையை விட இன்று 80 ரூபாய் குறைந்து 52,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை நேற்றோடு ஒப்பிடுகையில் இன்று 11 ரூபாய் குறைந்து 7,151 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 88 ரூபாய் குறைந்து 57,208 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏதேனும் அவசர நேரங்களில் வங்கிகளுக்கு சென்று அவர்கள் கூறும் விஷயங்களுக்கு இணங்கி எல்லா செயல்முறைகளையும் முடித்து லோன் பெறுவதானால் சற்று கடினம் தான். இதனால் அவசர தேவைகளுக்கு லோன்களை நம்பி இருக்க முடியாது. இந்தக் காரணத்தினால் தான் நாட்டு மக்களிடையே தங்கத்திற்கு அதிக மரியாதை இருக்கிறது.
உறவினர்களே 1 ரூபாய் தருவதற்கு யோசிக்கும் இக்காலத்தில் கையில் 1 கிராம் தங்க நகை இருந்தால் அதை வைத்து தேவையான விஷயங்களை செய்து கொள்ள முடியும் என்பதற்காகவே காலங்காலமாக மக்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். என்னதான் டிஜிட்டல் கோல்ட் மற்றும் தங்க பத்திரங்கள் வந்தாலும் அவற்றை அடமானம் வைக்க முடியாது என்ற காரணத்தினால் இன்னமும் வெவ்வேறு முதலீட்டு அம்சங்கள் இருந்தும் தங்க நகைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் சிலர்.
இதுபோன்ற நபர்களுக்கு நேற்றைய தினம் சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்திருக்கும். ஏனெனில் நேற்று ஒரு சவரனுக்கு 1000 ரூபாய் தங்க விலை அதிகரித்தது. அதற்கு மாறாய் இன்று சற்று குறைந்துள்ளது. விலை ஏறினால் மட்டும் மிகுதியாக ஏறிக்கொண்டே செல்கிறது. ஆனால் விலை குறைந்தால் சிறிதளவு தான் குறைகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பொருளாதார மந்த நிலை. பொருளாதார மந்த நிலை ஏற்படும் போது மக்கள் தங்கத்தை பாதுகாப்பு என்ற நினைத்து அதிகம் வாங்கத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக தேவை அதிகரிக்கும். அப்போது விலை உயரும். புவிசார் அரசியல் பதட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு போன்ற காரணங்களும் தங்க விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திருமணங்கள், பண்டிகைகள் போன்ற சுப தினங்களிலும் தங்கத்தின் விலை உயரக்கூடும். இந்த மாதத்தில் திருமணங்கள் எதுவும் நடந்திருக்காது. எனவே இனிவரும் மாதங்களில் திருமண சீசன் வர உள்ளதால் தங்க விலையில் தொடர் ஏற்றம் இருக்கும் என்றே கூறப்படுகிறது. எனவே தங்கம் வாங்க விரும்புவோர் விலை குறைந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications