வெள்ளிக்கிழமை நாள் விடியும் போதே பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களுடன் விடிந்தது என்றால் மிகையில்லை. மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் படைகள் காசா-வில் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது ஈரான் நாட்டின் மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது.
இதனால் பாதுகாப்பு முதலீடாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்தன. இதேபோல் ஈரான் நாட்டில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் சப்ளை குறையும் என்பதால் இதன் விலையும் தடாலடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையில், தங்கம் 10 கிராமுக்கு 1.12% உயர்ந்து ரூ.99,500-இல் தொடங்கி, ரூ.1,00,403 உச்சத்தை எட்டியது. வெள்ளி கிலோவுக்கு ரூ.565 உயர்ந்து ரூ.1,06,450-இல் தொடங்கி, ரூ.1,06,748-ஐ தொட்டது. சர்வதேச சந்தையில், தங்க விலை 5 மாத உச்சமான 3,450 டாலர் அளவை நெருங்கியது.
இதன் வாயிலாக இந்திய ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை முதல் முறையாக 1 லட்சம் என்ற அளவீட்டை தொட்டு, சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 10 கிராம் தங்கம் விலை 2120 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1950 ரூபாய் வரையில் உயர்ந்து 92,950 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
இதேபோல் வெள்ளி விலையை பார்க்கும் போது ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 120000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. மேலும் 10 கிராம் பிளாட்டினம் விலை 1760 ரூபாய் உயர்ந்து 35,410 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலின் தாக்கம்: இஸ்ரேல், ஈரானின் நதான்ஸ் (Natanz) அணு உற்பத்தி மையம் உள்ளிட்ட அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரான் "விரைவில் பதிலடி கொடுக்கும்" என்றும், இஸ்ரேலுக்கு எதிராக போர் அறிவிக்கப்படலாம் என்றும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஈரான் ஆயுதப் படைகளின் தலைமை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா "பெரும் விலை கொடுக்கும்" என எச்சரித்தது. இந்த மோதல், சந்தை பதற்றத்தை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் முதலீட்டு சந்தையை மீண்டும் மோசமான நிலைக்கு திருப்பியுள்ளது. இதனால் உலகளவில் தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
சந்தை நிச்சயமற்ற தன்மையும், புவிசார் அரசியல் நெருக்கடியும் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கம், அமெரிக்க கருவூல பத்திரங்கள், மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றை பாதுகாப்பு சொத்துகளாக தேர்ந்தெடுக்கின்றனர்.
இதனால் தற்போது 3440 டாலர் அளவில் வர்த்தகமாகி வரும் ஒரு அவுன்ஸ் தங்க விலை அடுத்த சில நாட்களில் 3,500 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஈரான் கடுமையான பதிலடி கொடுத்தால் மோதல் மேலும் தீவிரமடையலாம், இதனால் போர் அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் வாய்ப்பகளும் உள்ளது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியின் (Fed) வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகளும், தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது.
இந்திய சந்தையில் தாக்கம்: இந்தியாவில், காலம் காலமாக தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு முதலீடுகளாக பார்க்கப்படும் வேளையில், இத்தகைய போர் பத்தற்றத்திற்கு மத்தியில் தங்கம் முக்கியமானதாக விளங்கி வருகிறது. ஆனால் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டிய நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் முதலீடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
MCX-ல் தங்கத்தின் விலை உயர்வு, சர்வதேச சந்தை போக்குகளை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் தங்க நகை மற்றும் முதலீட்டு தேவைகளுக்கு இந்த விலை உயர்வு செலவை அதிகரிக்கலாம், ஆனால் உள்நாட்டு தங்க உற்பத்தி (கோலார் தங்க வயல்கள்) இதை ஓரளவு ஈடுசெய்யலாம்.
தங்கத்தின் நிலை இதுதான்..: மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்தால், தங்க விலை மேலும் உயரலாம், இது உலகளாவிய பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும். இதன் மூலம் தங்கம் விலை அடுத்த 5 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3500 டாலரை தாண்டி புதிய உச்சத்தை எட்டும், இதன் மூலம் இந்தியாவில் தங்கம் விலை 1 லட்சம் அளவீட்டை குறையாமல் தக்கவைத்துக்கொள்ளும்.
More From GoodReturns

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!



Click it and Unblock the Notifications