தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகும்போது தான் எந்த அளவுக்கு முக்கியம் என்பதும் பாதுகாப்பு என்பதும் அனைவருக்கும புரியும். இந்த வகையில் உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சம் மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நெருக்கடி மூலம் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை MCX சந்தையில் 60000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வரும் வேளையில் அமெரிக்காவின் பொருளாதாரம் வர்த்தக சந்தை தடுமாற்றம் அடைய துவங்கியுள்ளதன் வெளிப்பாடு தான் தங்கம் மீதான முதலீடு. முதலீட்டாளர்கள் முதல் அரசுகள் வரையில் தங்கத்தை முக்கிய மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நெருக்கடி காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி உயர்வும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகைகள்
இன்றைய தலைமுறையினர் தங்க நகைகளை அதிகம் விரும்புவது இல்லையென்றாலும் முதலீடு செய்ய தங்கத்தை முக்கிய முதலீடாக பார்க்கின்றனர். இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்த தங்கம் விலை மெல்ல மெல்ல உயர துவங்கியது.
அமெரிக்க வங்கி திவால்
silvergate bank வீழ்ச்சியில் துவங்கி சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி, First Republic Bank ஆகியவை அமெரிக்காவில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் First Republic Bank-ஐ சுமார் 11 வங்கிகள் இணைந்து 30 பில்லியன் டாலர் அளவிலான தொகை uninsured deposit ஆக முதலீடு செய்து காப்பாற்றியது.
ஐரோப்பிய வங்கி துறை
அதுவே ஐரோப்பாவில் கிரெடிட் சூயிஸ் பணப்புழக்கப் பிரச்சனையில் மாடிக்கொண்ட போது சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி 50 பில்லியன் பிராங்க் கொடுத்து காப்பாற்றிய பின்னும், கிரெடிட் சூயிஸ் நிலைமை சரியாகவில்லை. இதனால் சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியாக கிரெடிட் சூயிஸ் வங்கியை மாபெரும் வங்கியான UBS 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு வாங்க உள்ளது.
வங்கிகள் முக்கியம்
ஆனாலும் முதலீட்டு சந்தையில் வங்கிகளின் வீழ்ச்சி எதிரொலியில் இருந்து மீள முடியவில்லை, ஒவ்வொரு நாட்டின் வர்த்தகம், வளர்ச்சி, பொருளாதாரம், முதலீடு ஆகிய அனைத்தும் வங்கிகளை சார்ந்திருக்கும் நிலையில் ஐரோப்பிய சந்தையில் பெரும் ஆதிக்கம் தெலுத்தும் கிரெடிட் சூயிஸ் போன்ற வங்கிகளின் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
இதன் வாயிலாக சர்வதேச சந்தையின் ஸ்பாட் கோல்ட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1968 டாலரில் இருந்து 2007 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் MCX சந்தையில் ஏப்ரல் மாதம் 05 ஆம் தேதி முடிவடையும் பியூச்சர் கான்டிராட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.61 சதவீதம் உயர்ந்து 60,341.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.28 சதவீதம் அதிகரித்து 69,381.00 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!



Click it and Unblock the Notifications