இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் முக்கிய காரணியாக விளங்கும் சர்வதேச தங்கம் விலை தற்போது ஒரு வருட உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்கள் தங்களுடைய சிறிய சேமிப்பில் இருந்து தங்கத்தை வாங்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறி தான், இந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய குடும்பங்கள் தங்கத்தை முக்கியமான முதலீடாக பார்க்கும் நிலையில் தங்கம் விலை உயர்வு பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் எற்படுத்தியுள்ளது.
COMEX தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது வாரமாக உயர்ந்துள்ளது, கடந்த ஒரு வாரத்தில் 2 சதவீத்திற்கும் அதிகமாக உயர்ந்த சர்வதேச தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 2,049.2 டாலர் என்ற ஒரு வருட உச்சத்தை தொட்டு உள்ளது. தங்கம் விலைக்கு முக்கியமான காரணம் அமெரிக்க பொருளாதாரத்தில் பதிவான மந்த நிலை என்றால் மிகையில்லை.

புனித வெள்ளி காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தக சந்தை விடுமுறை, இதனால் கடந்த வார வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2007.25 டாலராக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.56 சதவீதம் சரிந்து 60,515.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 74,554 ரூபாயாக உள்ளது.
சமீபத்தில் வெளியான அமெரிக்க பொருளாதார தரவுகள், வேலைவாய்ப்பின்மை அளவுகள் ஆகியவை அந்நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனாலேயே அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலான நிலையிலும் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதேபோல் இனி வரும் காலத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்று கணிப்புகள் கூறுகிறது.
இதன் வாயிலாக 10 வருட அமெரிக்க பத்திரத்தின் லாப அளவு 8 மாத சரிவான 3.25 சதவீதத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனாலேயே பெருமளவிலான முதலீடுகள் தங்கம் மீது திரும்பியுள்ளது, இதனால் COMEX தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது வாரமாக உயர்ந்துள்ளது, கடந்த ஒரு வாரத்தில் 2 சதவீத்திற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு அவுன்ஸ் 2,049.2 டாலராக உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கம் விலை : சென்னை - 56,400 ரூபாய், மும்பை - 55,800 ரூபாய்,டெல்லி - 55,950 ரூபாய்,கொல்கத்தா - 55,800 ரூபாய்,பெங்களூர் - 55,850 ரூபாய்,ஹைதராபாத் - 55,800 ரூபாய்,கேரளா - 55,800 ரூபாய்,புனே - 55,800 ரூபாய்,பரோடா - 55,850 ரூபாய், அகமதாபாத் - 55,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,950 ரூபாய், லக்னோ - 55,950 ரூபாய், கோயம்புத்தூர் - 56,400 ரூபாய், மதுரை - 56,400 ரூபாய்.
24 கேரட் தங்கம் விலை : சென்னை - 61,530 ரூபாய், மும்பை - 60,870 ரூபாய், டெல்லி - 61,020 ரூபாய், கொல்கத்தா - 60,870 ரூபாய், பெங்களூர் - 60,920 ரூபாய், ஹைதராபாத் - 60,870 ரூபாய், கேரளா - 60,870 ரூபாய், புனே - 60,870 ரூபாய், பரோடா - 60,920 ரூபாய், அகமதாபாத் - 60,920 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,020 ரூபாய், லக்னோ - 61,020 ரூபாய், கோயம்புத்தூர் - 61,530 ரூபாய், மதுரை - 61,530 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 80200.00 ரூபாய், மும்பை - 76600.00 ரூபாய், டெல்லி - 76600.00 ரூபாய், கொல்கத்தா - 76600.00 ரூபாய், பெங்களூர் - 80200.00 ரூபாய், ஹைதராபாத் - 80200.00 ரூபாய், கேரளா - 80200.00 ரூபாய், புனே - 76600.00 ரூபாய், பரோடா - 76600.00 ரூபாய், அகமதாபாத் - 76600.00 ரூபாய், ஜெய்ப்பூர் - 76600.00 ரூபாய், லக்னோ - 76600.00 ரூபாய், கோயம்புத்தூர் - 80200.00 ரூபாய், மதுரை - 80200.00 ரூபாய்.


Click it and Unblock the Notifications