செப்டம்பர் 25-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை போகும் போக்கை பார்த்தால் நிபுணர்கள் கணித்தது போல 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்ச ரூபாயை எட்டி விடும் போல. அந்த அளவுக்கு தங்கம் விலையில் தினசரி ஏற்றம் மட்டுமே இருந்து வருகிறது. அதுவும் கடந்த 6 நாட்களாக குறைந்தபாடில்லை.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,060 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702 ஆக அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,000-த்தை நெருங்கியுள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோவை மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 60 அதிகரித்து 7,060 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 480 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி 56,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கத்தினை விரும்பி வாங்கும் மக்களுக்கு இன்றைய தினம் சாதகமாக இல்லை. அதே போல 24 கேரட் தங்கம் விலை 66 ரூபாய் அதிகரித்து 7,702 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 528 ரூபாய் அதிகரித்து 61,616 ரூபாயை எட்டியுள்ளது.
ஒரு கிராம் 18 கேரட் தங்கம் விலை 49 ரூபாய் அதிகரித்து 5,783 ரூபாயாக உள்ளது, 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 392 ரூபாய் அதிகரித்து 46,264 ரூபாயாக உள்ளது.
கடந்த 6 நாட்களுக்குள் மிகப்பெரிய ஏற்றம்: கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 6,825 ரூபாயாக இருந்தது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,445 ஆக இருந்தது. அதிலிருந்து இன்று வரை ரூ.235 அதிகரித்துள்ளது. இது கடந்த ஆறு நாட்களுக்குள் ஏற்பட்ட விலை ஏற்றம்.
கடந்த 13 நாட்களில் ஏற்பட்ட ஏற்றம்: கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதியிலிருந்து இன்றுவரை பார்த்தால் தங்கம் விலை 300 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பு அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 11-ஆம் தேதி வரை தங்கம் விலை 3 நாட்கள், 4 நாட்கள் என சீராக விலையில் மாற்றம் இல்லமல் இருந்தது. தங்கத்தை முக்கிய முதலீடாக பார்த்து தங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக சேர்க்கும் பெற்றோர்கள், தங்கள் மகளின் திருமணத்திற்காக நகை வாங்க திட்டமிடும் பெற்றோர்களுக்கு இன்று ஷாக் தரும் வகையில் 60 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 101 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1,01,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications