சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து விலை குறைந்து சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதியை தந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரையிலான ஐந்து நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருக்கிறது.
ஈரான் போர் பதற்றத்தால் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் விலை 160 ரூபாய் விலை குறைந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 15000 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,20, 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் 1,20,000 ரூபாய்க்கும் கீழ் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம், 1,19,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு சவரன் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று 1280 ரூபாய் குறைவு கண்டிருக்கிறது, 10 கிராம் தங்கம் 1, 51,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தங்கம் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. மார்ச் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கி இன்று வரையிலான 5 நாட்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை நிலவரத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம்
மார்ச் 2 , திங்கள் - ரூ.15,660
மார்ச் 3, செவ்வாய் -ரூ.15,465
மார்ச் 4, புதன் - ரூ.15,200
மார்ச் 5, வியாழன் - ரூ.15,120
மார்ச் 6, வெள்ளி- ரூ.14,960

இந்த ஐந்து நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 815 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 6520 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. 2026ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான காலகட்டத்தில் முதன் முறையாக தொடர்ந்து 5 நாட்கள் தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருப்பது இதுவே முதன்முறை. மார்ச் மாதத்தில் தான் இந்த மேஜிக் நடந்திருக்கிறது. பிப்ரவரியில் விலை குறைந்தாலும் இரண்டு நாட்கள் குறையும் அடுத்த ஒரு நாள் உயர்வது என்று தான் இருந்தது. ஆனால் முதல் முறையாக தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கம் விலை குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலை இன்று குறைந்து இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை சரிந்து 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை குறைந்து 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வீடுகளில் விசேஷம் வைத்திருப்பவர்கள், தங்கம் வெள்ளி வாங்க வேண்டும் என காத்திருந்தவர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications