சென்னையில் தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவடைந்து இருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதையும், வரும் நாட்களில் எப்படி இருக்க போகிறது என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை அதாவது 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையிலான நான்கு வர்த்தக நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தது. இனி விலை ஏறுமுகம் தான் என மக்கள் எண்ணிய நிலையில் நேற்று ,இன்று என தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 14, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் சற்றே விலை குறைந்து 14 , 900 ரூபாயாக விற்கப்படுகிறது.

அதாவது தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது தங்கம் நேற்றைய தினம் 1,19,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் 160 ரூபாய் விலை குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலை குறைந்திருந்தாலும் பெரிய அளவில் குறையவில்லை. நேற்று 10 ரூபாய் ம் இன்று 20 ரூபாய் என ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து இருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 240 ரூபாய் சரிந்து இருக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கமும் கிராம் 22 ரூபாய் குறைந்து 16,255 ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 1,30,040 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்து 12,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 120 ரூபாய் விலை குறைந்து 1,02,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை பொருத்தவரை மாற்றமில்லை, தொடர்ந்து இரண்டு நாட்களாக வெள்ளியின் விலை மாறாமல் ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒருகிலோ 2.95 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் முழுவதுமே இந்தியாவில் தங்கம், வெள்ளி விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை.
ஜனவரி மாத இறுதியில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1, 33,000 ரூபாய் என்று வரலாற்று உச்சத்தையும் ஒரு கிலோ வெள்ளி விலை 4.25 லட்சம் ரூபாய் என இதுவரை இல்லாத உச்சபட்ச விலையையும் எட்டின. ஆனால் அதன் பிறகு படிப்படியாக விலைகள் சரிய தொடங்கின. பிப்ரவரி மாதம் முழுவதுமே தங்கம் விலை பெரிய அளவில் உயரவும் இல்லை பெரிய அளவில் சரியவுமில்லை ஒரு குறிப்பிட்ட விலை வரம்பிற்கு உள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.
இதே நிலை மார்ச் மாதத்திலும் தொடருமா அல்லது மார்ச் மாதம் தங்கத்தின் விலை ஏறப்போகிறதா என்ற குழப்பம் மக்களிடையே நீடிக்கிறது. தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்ற முடிவினை எடுப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். எனவே மார்ச் மாதம் தங்கம், வெள்ளி விலை போக்கை ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஏற்படும் உடன்பாடுகள் தான் முடிவு செய்ய போகின்றன. ஒப்பந்தம் ஏற்பட்டால் தங்கம் விலை உயராது, உடன்பாடு ஏற்படாமல் ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் தங்கம் விலை உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications